கடந்த டிசம்பர் 20 ஆம் திகதி முதல் இன்று காலை வரையான காலப் பகுதியில் நாடு முழுவதும் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் 39 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தக் காலகட்டத்தில் மொத்த 527 விபத்துக்கள் பதிவாகியுள்ளது.

இந்த விபத்துக்களில் 122 பேர் பலத்த காயமடைந்துள்ளதாகவும், 238 பேர் சிறு காயங்களுக்குள்ளாகியுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பிரதிப் பொலிஸ் மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்தார்.

வாகன சாரதிகள் மற்றும் பாதசாரிகள் இருவரும் சாலைகளில் பொறுப்புடன் செயல்பட்டிருந்தால் இந்த அளவு விபத்துக்களும் உயிர் சேதங்களும் தவிர்க்கப்பட்டிருக்கும் என்று சுட்டிக்காட்டிய அஜித் ரோஹன, புத்தாண்டு தினத்திற்கு அடுத்த பல நாட்கள் தீர்க்கமாது. எனவே பொது மக்கள் அவதானத்துடன் வாகனங்களை செலுத்துமாறும் அறிவுறுத்தியுள்ளார்.