பதிலடி கொடுத்து தொடரை சமப்படுத்திய இந்தியா

Published By: Vishnu

29 Dec, 2020 | 12:50 PM
image

அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.

அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் இந்திய கிரிக்கெட் அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. 

இதில் அடிலெய்டில் நடந்த முதலாவது பகல்-இரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது. 

இதனைத் தொடர்ந்து இந்தியா- அவுஸ்திரேலியா அணிகள் இடையிலான 2 ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உலகின் மிகப்பெரிய மைதானங்களில் ஒன்றான மெல்போர்னில் நடைபெற்றது.

போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 195 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் தனது முதல் இன்னிங்ஸுக்காக துடுப்பெடுத்தாடிய இந்திய அணியானது  2 ஆவது நாள் முடிவில் 5 விக்கெட்டுக்கு 277 ஓட்டங்களை எடுத்திருந்தது. 

12 ஆவது சதத்தை அடித்த அணித் தலைவர் அஜிங்யா ரஹானே 112 ஓட்டங்களுடனும், ரவீந்திர ஜடேஜா 57 ஓட்டங்களுடனும், அடுத்து வந்து வீரர்கள் குறைவான ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். 

இதன்மூலம் இந்திய அணி முதல் இன்னிங்சில் 326 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

பின்னர் 131 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் அவுஸ்திரேலிய அணி 2 ஆவது இன்னிங்ஸை தொடங்கியது. 

தொடக்க ஆட்டக்காரர் ஜோ பர்ன்ஸ் (4) உமேஷ் யாதவின் பந்து வீச்சில் விக்கெட் காப்பாளர் ரிஷாப் பந்திடம் பிடிகொடுத்தார். அடுத்து மேத்யூ வேட்டும், மார்னஸ் லபுஸ்சேனும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்க போராடினர். 

எனினும் ஓட்ட எண்ணிக்கை 42 ஓட்டங்களை எட்டியபோது லபுஸ்சேன் 28 ஓட்டங்களுடன் அஸ்வின் சுழலில் ஸ்லிப்பில் நின்ற ரஹானேவிடம் பிடிகொடுத்து வெளியேறினார்.

3 ஆவது விக்கெட்டுக்காக களமிறங்கிய ஸ்டீவன் சுமித் நீண்ட நேரம் தாக்குப் பிடிக்காது டக்கவுட்டுடன் வெளியேற, மறுமுனையில் நிதானமாக செயல்பட்ட மேத்யூ வேட் 40 ஓட்டங்களுடன் ஜடேஜாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் ஆட்டமிழந்தார்.

தொடர்ந்து வந்த டிராவிஸ் ஹெட் 17 ஓட்டங்களுடனும், அணித் தலைவர் டிம் பெய்ன் ஒரு ஓட்டத்துடன் விரைவாக ஆட்டமிழந்து வெளியேறினர்.

இதன்போது அவுஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்புக்கு 99 ஓட்டங்களை பெற்றிருந்தது. 

பின்னர் ஆட்ட நேர முடிவில் அவுஸ்திரேலிய அணி 2 ஆவது இன்னிங்சில் 66 ஓவர்களில் 6 விக்கெட்டுக்கு 133 ஓட்டங்களை எடுத்து இரு ஓட்டங்களினால் மாத்திரம் முன்னிலை பெற்றிருந்தது. 

அதை தொடர்ந்து இன்று நடைபெற்ற 4 ஆவது நாள் ஆட்டத்தில் கேமரூன் கிரீன் 17 ஓட்டங்களுடனும், கம்மின்ஸ் 15 ஓட்டங்களுடனும் துடுப்பெடுத்தாட களமிறங்கினர்.

எனினும் இந்திய அணியின் சிறப்பான பந்துவீச்சில் பேட் கம்மின்ஸ் 22 ஓட்டங்களுடனும், சிறப்பாக ஆடிய கேமரூன் கீரின் 45 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

அடுத்து களமிறங்கிய நாதன் லைன் 3 ஓட்டத்துடனும், ஹேசில் வுட் 10 ஓட்டத்துடனும் வெளியேறினர். 

இறுதியில் அவுஸ்திரேலிய அணி 103.1 ஒவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 200 ஓட்டங்களை எடுத்தது. 

பந்து வீச்சில் இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக மொஹமட் சிராஜ் 3 விக்கெட்டுகளையும், அஸ்வின், ஜடேஜா மற்றும் பும்ரா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். 

இதனால் அவுஸ்திரேலிய அணி  69  ஓட்டங்களினால் மாத்திரம் ‍முன்னிலை பெற, இந்திய அணியின் வெற்றிக்கு 70 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் சார்பில் மயங்க் அகர்வால் மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறக்கினர். 

இதில் மயங்க் அகர்வால் 5 ஓட்டங்களுடன் பிடிகொடுத்து வெளியேறினார். அவரைத்தொடர்ந்து களமிறங்கிய புஜாராவும் 3 ஓட்டங்களில் ஆட்டமிழந்து அதர்ச்சி அளித்தார்.

அடுத்ததாக சுப்மன் கில்லுடன், அணித் தலைவர் ரஹானே ஜோடி சேர்ந்து சிறப்பாக துடுப்பெடுத்தாட, இந்திய அணி 15.5 ஓவர்களில் 2 விக்கெட்டை இழந்த நிலையில் வெற்றி பெற்றது.

சுப்மன் கில் 35 ஓட்டங்களுடனும், ரஹானே 27 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

இதன்மூலம்  4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியும், அவுஸ்திரேலியா அணியும் 1-1 என்ற புள்ளிக் கணக்கில் சமநிலையில் உள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41
news-image

நினைவிலிருந்து நீங்காத மூத்த கால்பந்தாட்ட வீரர்கள்...

2024-04-17 14:38:02
news-image

பெய்ஜிங் அரை மரதனில் சீன வீரருக்கு...

2024-04-17 12:12:35
news-image

ஜொஸ் பட்லர் 2ஆவது சதத்தைக் குவித்து...

2024-04-17 01:29:43
news-image

பண்டைய ஒலிம்பியாவில் ஒலிம்பிக் சுடர் ஏற்றப்பட்டது

2024-04-16 23:45:09