ஆண் குழந்தைக்கு தந்தையானார் யோகி பாபு

Published By: Digital Desk 3

29 Dec, 2020 | 11:50 AM
image

நகைச்சுவை நடிகர் யோகி பாபு - மஞ்சு பார்கவி தம்பதியினருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

தமிழ்த் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக யோகி பாபு வலம் வருகிறார்.

இவருக்கும் மஞ்சு பார்கவிக்கும் கடந்த பெப்ரவரி 5 ஆம் திகதி திருமணம் நடைபெற்றது. மிகவும் எளிமையாக அவரது சொந்த ஊரில் நடந்த இந்தத் திருமணத்தில் யோகி பாபுவின் வீட்டார் மட்டுமே கலந்து கொண்டனர்.

திருமணம் முடிந்த அடுத்த சில மாதங்களில் மஞ்சு பார்கவி கர்ப்பமடைந்தார்.

மனைவியின் வளைகாப்பு விழாவையாவது பெரிய அளவில் நடத்தலாமென்று விரும்பினார் யோகி பாபு இன்று (29.12.2020) அந்த வளைக்காப்பு விழாவை தன் வீட்டில் நடத்துவதற்கு பெரிய ஏற்பாடுகள் செய்திருந்தார்.

இந்நிலையில்,அவருக்கு நேற்று ஆண் குழந்தை பிறந்துள்ளது. தந்தையான யோகி பாபுவுக்கு தமிழ்த் திரையுலகினர் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்