சிவனொளிபாதமலை யாத்திரை காலம் இன்று ஆரம்பம் 

Published By: Digital Desk 3

29 Dec, 2020 | 11:57 AM
image

2021 ஆம் ஆண்டுக்கான சிவனொளிபாதமலை யாத்திரைக்கான பருவகாலம் பூரணை தினமான இன்று (29.12.2020) ஆரம்பமாகியது.

சிவனொளிபாத மலை கடல் மட்டத்திலிருந்து (7,359 அடி) உயரமான கூம்பு வடிவிலான மலையாகும். இம்மலையானது சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களுக்கிடையிலான எல்லையில் அமைந்துள்ளது.

இரத்தினபுரி பெல்மதுளை கல்பொத்த ரஜமஹா விகாரையிலிருந்து புனித விக்கிரகங்கள் நல்லதண்ணி பாதை வழியாக நேற்று (28.12.2020) நள்ளிரவு மலையுச்சிக்கு எடுத்து செல்லப்பட்டதாக சிவனொளிபாதமலை நாயக்க தேரர் பெங்கமுவே தம்மதின்ன தெரிவித்தார். இந்த முறை 4 வீதிகளின் ஊடாக ஊர்வலம் பயணித்தது.

அந்தவகையில், பலாங்கொடை - பொகவந்தலாவ வீதியில் ஊர்வலம் பயணித்து, அவிசாவளை, அட்டன் – நல்லதண்ணி ஊடாக சிவனொளிபாதமலைக்கு ஒரு ஊர்வலம் சென்றது.  

மற்றைய ஊர்வலம் குருவிட்ட - இரத்தினபுரி வீதி ஊடாக பயணித்தது. மற்றது, பெல்மதுளை இரத்தினபுரி – ரஜமாவத்தை வழியாக சென்றது.

மேலும், சிவனொளிபாதமலை பருவகால யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களுள்  ஒரே தடவையில் 200 பேருக்கு  மாத்திரமே அனுமதி வழங்கப்படும் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் யாத்திரையில் பங்கேற்கும் அடியார்கள்  தத்தமது  பிரதேச செயலகங்களில் பதிவு செய்வதுடன் தனிமைப்படுத்தப்படுத்தலுக்கு உட்படுத்தப்படவில்லை  என்பதைனை  பொதுசுகாதார பரிசோதகர்களினால்  உறுதிப்படுத்தப்பட்ட  அனுமதி பத்திரமொன்றை தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அஸ்வெசும சிறந்த திட்டமென்பதை ஏற்றுக் கொள்ள...

2025-02-08 15:46:50
news-image

பாடசாலை அதிபரை கடத்திச் சென்று தாக்கி...

2025-02-08 17:33:13
news-image

நுவரெலியா - தலவாக்கலை மார்க்கத்தில் ஈடுபடும்...

2025-02-08 17:12:01
news-image

பிம்ஸ்டெக் பொதுச்செயலாளர் பிரதமர் ஹரிணியை சந்தித்து...

2025-02-08 14:53:14
news-image

பொலன்னறுவையில் விபத்து ; ஒருவர் பலி...

2025-02-08 16:36:31
news-image

மாத்தறையில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் ஒருவர் கைது

2025-02-08 16:17:24
news-image

வட்டுக்கோட்டை துணைவி பிரகேதீஸ்வரர் ஆலயத்தினை மீள்...

2025-02-08 15:46:12
news-image

கிழக்கு மாகாணத்தில் கடந்த ஒரு மாத...

2025-02-08 16:04:02
news-image

கொழும்பு - வெல்லவாய வீதியில் விபத்து...

2025-02-08 15:43:57
news-image

இராமகிருஷ்ண மிஷனின் கிளை திங்கள் கொட்டகலையில்...

2025-02-08 14:51:08
news-image

மாற்றுக்காணி என்ற பேச்சுக்கே இடமில்லை :...

2025-02-08 15:49:12
news-image

குருணாகலில் வெளிநாட்டு சிகரட்டுகளுடன் இருவர் கைது

2025-02-08 15:58:20