(இராஜதுரை ஹஷான்)
மாகாண சபைகளின் நிர்வாகம் ஆளுநர்களினாலும், அரச அதிகாரிகளினாலும் முன்னெடுக்கப்படுவது ஜனநாயக கோட்பாட்டுக்கு முரணானது என பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.
பொதுஜன பெரமுன காரியாலயத்தில் நேற்று (28.12.2020) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மாகாண சபை தேர்தல் குறித்து மாறுப்பட்ட பல கருத்துக்கள் குறிப்பிடப்படுகின்றன. மாகாண சபை தேர்தல் உரிய காலத்தில் இடம்பெற்றிருந்தால் மாகாண சபைக்கு எதிரான கருத்துக்கள் தற்போது தோற்றம் பெற்றிருக்காது.
மாகாண சபை தேர்தல் குறித்து அரசாங்கம் விரைவில் உறுதியான தீர்மானத்தை எடுக்கும். மாகாண சபை நிர்வாகம் ஆளுநர் உட்பட அரச அதிகாரிகளினால் முன்னெடுக்கப்படுவது ஜனநாயக கொள்கைக்கு முரணானது என்பதில் பொதுஜன பெரமுன கட்சி உறுதியாக உள்ளது.
தேசிய வளங்களை பிற நாட்டவர்களுக்கு விற்பது அரசாங்கத்தின் கொள்கையல்ல. தேசிய வளங்களை கொண்டு வெளிநாட்டு முதலீடுகள் ஊக்குவிக்கப்படுமே தவிர தேசிய வளங்கள் ஒருபோதும் விற்கப்பட மாட்டாது.
கடந்த அரசாங்கம் செய்த தவறை தற்போதைய அரசாங்கம் தொடர்ந்தால் மக்கள் ஜனநாயக ரீதியில் பாடம் புகட்டுவார்கள். ஆகவே மக்கள் வழங்கிய ஆணைக்கு எதிராக அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM