களனி கங்கையில் குப்பைகளை கொட்டிய 35 பேரை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர்களில் 25 பேர் பெண்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டவர்கள் பேலியகொட, வத்தளை மற்றும் ஹேகித்த பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

குறித்த நபர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.