மேல் மாகாணத்திலிருந்து வெளியேறும் நபர்களை அடையாளம் காண்பதற்காக வெளியேறும் இடங்களில் எழுமாறாக மேற்கொள்ளப்படும் அன்டிஜன் பரிசோதனைகளில் 61 கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் 18 ஆம் திகதி முதல் மேல் மாகாணத்தை விட்டு வெளியேறும் நபர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனைகளின் எண்ணிக்கை 10 ஆயிரத்தையும் கடந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.