மராட்டியத்தில் ஆற்றில் வெள்ளம் காரணமாக பிரித்தானிய ஆட்சிகால பாலம் இடிந்து விழுந்ததில் 22 பேருடன் 2 பஸ்கள் அடித்துச் செல்லப்பட்டது. காணாமல் போனவர்களில் இருவர் சடலாமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மராட்டியம் முழுவதும் பரவலாக தொடர்ந்து மழை பெய்து வருவதால் நீர்நிலைகள் நிரம்பி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. 

சாவித்ரி ஆற்றின் நீர்பிடிப்பு பகுதியில் கனமழை தொடர்ந்து பெய்து வருவதன் காரணமாக ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. 

மும்பை-கோவா நெடுஞ்சாலையில் சாவித்ரி ஆற்றில் 70 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர்கள் ஆட்சியில் கட்டப்பட்ட பாலம் அதிகாலை இடிந்து விழுந்துள்ளது. 

பாலம் இடிந்து விழுந்த பகுதியில் சென்றுக் கொண்டிருந்த மாநில போக்குவரத்து கழகத்திற்கு சொந்தமான 2 பஸ்கள் 22 பயணிகளுடன் அடித்து செல்லப்பட்டது. 

சம்பவம் நடைபெற்ற பகுதியில் தேசிய மேலாண்மை பேரிடர் படையினர் மற்றும் மாநில மீட்பு குழுவினர் அடங்கிய மீட்பு குழு தேடுதல் மற்றும் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளது.