நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க

Published By: Robert

13 Dec, 2015 | 09:12 AM
image

எதைப் பற்றிப் பேசினாலும் அதில் நாலுப் பேருடைய கருத்து என்ன என்பதை பற்றியும் அவர்கள் என்ன பேசுகிறார்கள் என்பதை பற்றியும் கவலைப்படும் சமுதாயம் நம்முடையது. 

இத்தகைய கருத்தை பற்றிக் கூறும் படம் தான் ' நாலு பேரு நாலு விதமா பேசுவாங்க'. முழுக்க முழுக்க நகைச்சுவை மிளிர எடுக்கப்படும் இந்தப் படத்தின் இயக்குனர் மாதவன். 

இந்த படத்தில் இந்தரஜித் கதாநாயகனாக அறிமுகமாக அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் புது முகம் தேவிகா மாதவன். பல்வேறு நகைசுவை நட்சத்திரங்கள் குழுமி இருக்கும் இந்தப் படத்தின்  கருத்து 'நமக்கு துன்பங்கள் இருக்கத்தான் செய்யும், அதையும் மீறி சிரிக்க வேண்டும் என்பதுதான். சமீபத்திய இயற்கை சீரழிவுகளால் சிரிப்பை மறந்த மக்களுக்கு, இந்த படத்தின் சிரிப்பு சிறந்த மருந்தாகும்.

தகவல் : சென்னை அலுவலகம்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்