வெயாங்கொடவில் இன்று காலை பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலில் பல குற்றங்களுடன் தொடர்புடைய 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேற்படி நபர் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 19 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டார்.

பொலிஸ் அதிகாரிகள் இன்று காலை குறித்த நபரை வெயாங்கொடவில் உள்ள ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் ஏற்பட்ட ஒரு மோதல் சம்பவம் காரணமாக அவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த சந்தேக நபர் மீது மூன்று வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

இதற்கிடையில், இந்த சம்பவத்தில் காயமடைந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிள் கம்பாஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.