கிளிநொச்சி கல்மடு பிரதேசத்தில் யானை உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இரவு குறித்த பகுதிக்கு சென்ற காட்டு யானை வயலை உணவாக்கி அழித்துள்ளதுடன், அப்பகுதியில் உயிரிழந்துள்ளது.
இன்று காலை வயல் நிலத்தை பார்வையிட சென்ற பொது மக்கள் யானை உயிரிழந்திருப்பது தொடர்பில் கிராம சேவையாளர் ஊடாக வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
உயிரிழந்த யானை தந்தந்துடன் காணப்படுவதுடன் குறித்த பகுதி அடர் காட்டினை அண்மித்த பகுதி என்பதும் குறிப்பிடத்தக்கது.
யானை உயிரிழந்தமை தொடர்பான மேலதிக விசாரணைகளை தர்மபுரம் பொலிசாரும், வன ஜீவராசிகள் திணைக்களமும் மேற்கொண்டு வந்தனர்.
குறித்த யானை சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின் இணைப்பில் சிக்கி உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் கல்மடு பகுதியை சேர்ந்த ஒருவரை வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் கைது செய்துள்ள நிலையில் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM