(எம்.மனோசித்ரா)
இலங்கையில் நாளாந்தம் கொவிட்-19 தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. தொற்றாளர் எண்ணிக்கை 40 000 ஐ கடந்துள்ள அதே வேளை மரணங்களின் எண்ணிக்கையும் 187 ஆக உயர்வடைந்துள்ளது.
கடந்த வாரம் கொழும்பு – முகத்துவாரம் முதியோர் இல்லத்தில் சுமார் 40 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று சனிக்கிழமை குறித்த முதியோர் இல்லத்தில் வாழ்ந்து வந்த நபரொருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இதுவரை 668 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டனர். இவர்களில் 408 தொற்றாளர்கள் மினுவாங்கொடை கொத்தணியுடனும் , 54 தொற்றாளர்கள் சிறைச்சாலை கொத்தணியுடனும் தொடர்புடையவர்கள் என்று அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று காலை கொரோனா தொற்றாளர்களில் மேலும் 712 பேர் குணமடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி நாட்டில், கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 32 701 ஆக உயர்வடைந்துள்ளது.
இன்று மாலை வரை இனங்காணப்பட்ட 40 842 தொற்றாளர்களில் 7954 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 432 பேர் கொரோனா தொற்று சந்தேகத்தில் வைத்திய கண்காணிப்பில் உள்ளனர்.
சனியன்று பதிவான மரணம்
இலங்கையில் கொரோனா தொற்றுக்குள்ளானவர்களில் மரண எண்ணிக்கை 187 ஆக அதிகரித்துள்ளது. நோயாளர்களில் மேலும் ஒருவரின் மரணம் சனிக்கிழமை பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் அரசாங்க தகவல் திணைக்களத்தினால் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் , கொழும்பு 15 முகத்துவாரம் பிரதேசத்தில் முதியோர் இல்லத்தில் வாழ்ந்துவந்த 67 வயது ஆணொருவர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று முன்தினம் சனிக்கிழமை உயிரிழந்துள்ளார். மரணத்திற்கான காரணம் கொவிட் 19 நிமோனியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நடவடிக்கை
சுமார் 40 நாடுகளில் தங்கியிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தூதரகங்கள், கன்ஸியூலர் அலுவலகங்கள் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென வெளிநாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது. நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்துள்ளவர்களை அழைத்துவரும் நோக்கத்துடன், சம்பந்தப்பட்ட நாடுகளுடன் இராஜதந்திர பேச்சுவார்த்தைகளை நடத்த ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது.
புதிய வைரஸ் தொடர்பில் விமான நிலையங்கள் , துறைமுகங்களில் விசேட நடவடிக்கை
பிரித்தானியாவில் இனங்காணப்பட்டுள்ள புதிய வைரஸ் தொடர்பில் இலங்கையின் விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்களில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் கண்டறியப்பட்டுள்ள புதிய கொரோனா வைரஸ் இலங்கையிலும் பரவுவதற்கான வாய்ப்பு இருப்பதாக தொற்று நோயியல் பிரிவின் பிரதானி வைத்தியர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளமைக்கமைய இவ்வாறு முன்கூட்டியே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM