பூமியை நாம் மென்மேலும் சூடுபடுத்துவது கொரோனாவைவிடக் கொடூரமாக அமையும்: பொ. ஐங்கரநேசன்

Published By: J.G.Stephan

27 Dec, 2020 | 04:51 PM
image

உலகம், காலநிலை மாற்றத்தின் கடுமையான விளைவுகளுக்கு முகம்கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதனைக் கருத்திற்கொள்ளாது பூமியை நாம் மென்மேலும் சூடுபடுத்துவது கொரோனாவைவிடக் கொடூரமாக அமையும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். 

அவர் மேலும் கூறுகையில், கடல்நீர் சூடாகுவதால் கடற்காற்றில் சேரும் நீராவியின் அளவு அதிகரிக்க அதிகரிக்க, புயலின் அழிப்புச்சக்தியும் அதிகரித்து வருகிறது. கடல் சூடாகிக் கடல் நீர் விரிவடைவதாலும், பனி மலைகள் உருகி வழிவதாலும் கடல் மட்டம் உயர்ந்து கொண்டிருக்கின்றது. இவற்றால் கரையோரப் பிரதேசங்கள் அடிக்கடி புயல்களுக்கு முகம் கொடுப்பதோடு கடல் நீரினுள் மூழ்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. 

பனிப்படுக்கைகளின் கீழே மனிதர்கள் பூமியில் தோன்றுவதற்கு முன்னர் காணப்பட்ட வைரசுக்கள் இப்போதும் உறை நிலையில் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பனி உருகுவதால் இவ்வைரசுக்கள் வெளிப்பட்டு மனிதர்களைத் தாக்குகின்ற அபாயமும் ஏற்பட்டுள்ளது. இவ்வைரசுக்கள் மனிதர்களுக்குப் புதியன என்பதால், இவற்றுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டிருக்காத காரணத்தால் பெரும் கொள்ளை நோய்களுக்கு மனிதர்கள் ஆட்பட நேரிடும்.

கொரோனா நோயை இல்லாதொழிப்பதற்கு உலகின் முழு நாடுகளும் ஒன்றுபட்டுப் போராடி வருகின்றன. ஆனால், நாம் வெளியேற்றி வருகின்ற கரிக்காற்றைக் கட்டுப்படுத்தக் கோருகின்ற ஐக்கியநாடுகள் சபையின் ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்துவதில் உலகநாடுகள் ஒன்றுபடத் தயாராக இல்லை. தங்களது அபிவிருத்தி பாதிக்கப்படும் என்று கூறி பெற்றோலிய எரிபொருட்களின் பயன்பாட்டைக் குறைப்பதற்குப் பல நாடுகள்  பின்னடித்து வருகின்றன. 

கொரோனோ நோய்க்கான தடுப்பு மருந்துகள் பயன்பாட்டுக்கு வந்ததும் கொரோனாவைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடலாம். ஆனால், காலநிலைப் பிறழ்வினால் ஏற்பட்டுவரும் இயற்கையின் கொடும் சீற்றங்களை எவராலும், எவற்றாலும் கட்டுப்படுத்த முடியாது. இவற்றை நிறுத்துவதற்குக் காற்றைக் கரிப்பிடிக்க வைத்துப் பூமியைச் சூடுபோடுகின்ற எமது செயற்பாடுகளைக் கட்டுப்படுத்துவதுதான் ஒரே வழி என்றும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

18,000 மில்லி லீட்டர் கோடா விஹாரையில்...

2024-04-19 10:45:18
news-image

விருந்துபசாரத்தில் வாக்குவாதம்: ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழப்பு!

2024-04-19 10:20:31
news-image

சில பகுதிகளில் 12 மணித்தியாலங்கள் நீர்...

2024-04-19 10:18:39
news-image

1991 ஆம் ஆண்டு ருமேனியாவில் இடம்பெற்ற...

2024-04-19 09:59:40
news-image

காசல்ரீ நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற மாணவன்...

2024-04-19 09:36:08
news-image

போதைபொருள் கடத்தல்களை இல்லாதொழிக்க சிறப்பு மோட்டார்...

2024-04-19 10:11:07
news-image

வெற்றிலை,பாக்கு விலை உயர்வு

2024-04-19 10:16:54
news-image

சிறுவர் இல்லங்களில் சிறுவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி!

2024-04-19 09:00:44
news-image

போதைப்பொருள் கடத்தல்காரர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணிய...

2024-04-19 09:03:35
news-image

இன்றைய வானிலை 

2024-04-19 06:12:21
news-image

இலங்கையில் சிவில், அரசியல் உரிமைகளின் எதிர்காலம்...

2024-04-18 20:41:15
news-image

கணவன் மரணம் : மனைவி தவறான...

2024-04-19 02:57:58