தெலுங்கு நட்சத்திர கதாநாயகன் அல்லு அர்ஜூன் நடிக்கும் ‘புஷ்பா’ படத்தில் அவருக்கு வில்லனாக ஆர்யா ஒப்பந்தம் ஆகியிருக்கிறார். இது, அந்தப் படத்தின் பரபரப்பை அதிகரித்திருப்பதுடன் தமிழ்நாட்டிலும் அந்தப் படத்திற்கான வரவேற்பை எகிற வைத்திருக்கிறது.

ரஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கும் இந்தப் படத்தின் இசையமைப்புப் பணியை தேவிஸ்ரீபிரசாத் ஏற்றிருக்கிறார். தெலுங்குதேசத்தின் முக்கிய இயக்குனர்களுள் ஒருவரான சுகுமார் இந்தப் படத்தை இயக்குகிறார்.

ஏற்கனவே இந்தப் படத்தின் வில்லனாக நடிப்பதற்கு விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். ஆனால், சில பல காரணங்களால் அவர் அந்தப் படத்தில் இருந்து விலகினார்.

இப்போது, விஜய் சேதுபதியின் இடத்துக்கே ஆர்யா தெரிவுசெய்யப்பட்டிருக்கிறார். தமிழிலும் விஷாலின் அடுத்த படமான எனிமியில் ஆர்யா வில்லனாக நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.