ரஜினியின் டுவிட்டர் பக்கத்தை திடீரென ஹேக் செய்ததால் பெரும் பரபரப்பு.!

Published By: Robert

03 Aug, 2016 | 11:59 AM
image

சூப்பர்ஸ்டார் ரஜினியின் டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் என்று புகழப்படும் நடிகர் ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘கபாலி’ படம் வசூலில் பெரும் சாதனைகளைப் படைத்து வருகிறது. இந்நிலையில், ரஜினியின் டுவிட்டர் பக்கத்தை மர்ம நபர்கள் முடக்கிய சம்பவம் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2013 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரஜினி டுவிட்டரில் இணைந்தார். சேர்ந்த ஒரேநாளில் சுமார் 10 இலட்சம் பேர் வரை இவரைப் பின்தொடர்ந்து டுவிட்டரையே ஸ்தம்பிக்க செய்தனர். 3 ஆண்டுகளில் இவரது டுவிட்டர் பக்கத்தை தொடர்பவர்களின் எண்ணிக்கை 3 கோடியை தாண்டியுள்ளது.

இந்நிலையில் ரஜினியின் டுவிட்டர் பக்கத்தை நேற்று யாரோ மர்ம நபர்கள் முடக்கினர். ஆனால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு ரஜினியின் டுவிட்டர் பக்கம் அவர்களிடமிருந்து மீட்கப்பட்டது. இதுகுறித்து ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யா தனுஷ் கூறும்போது, “அப்பாவின் டுவிட்டர் பக்கத்தை முடக்கம் செய்தவர்களிடமிருந்து மீட்டு விட்டோம். தற்போது இயல்பு நிலையில் இருக்கிறது. அனைவருக்கும் நன்றி”  என தெரிவித்திருக்கிறார். 

ரஜினி டுவிட்டர் பக்கம்; முடக்கப்பட்ட சம்பவம் அவரது இரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கீர்த்தி சுரேஷ் நடிக்கும் 'ரகு தாத்தா'...

2023-05-27 15:08:11
news-image

டிஜிட்டல் தளத்தில் வெளியாகும் 'ப்பூ'

2023-05-27 15:26:51
news-image

ஜி. வி. பிரகாஷ் குமார் நடிக்கும்...

2023-05-27 15:26:30
news-image

'மாமன்னன்' படத்தின் இரண்டாவது பாடல் வெளியீடு

2023-05-27 14:03:17
news-image

பசுபதி நடிக்கும் 'தண்டட்டி' பட அப்டேட்

2023-05-26 18:12:21
news-image

தீராக் காதல் - விமர்சனம்

2023-05-26 18:17:30
news-image

'வாழ்நாள் சாதனையாளர்' விருது பெரும் 'உலகநாயகன்'...

2023-05-26 18:18:27
news-image

இயக்குநராகும் நடன இயக்குநர் சதீஷ்

2023-05-26 18:19:07
news-image

கழுவேத்தி மூர்க்கன் - விமர்சனம்

2023-05-26 21:31:06
news-image

மீண்டும் இரட்டை வேடத்தில் நடிக்கும் சிலம்பரசன்

2023-05-26 15:49:18
news-image

பாரதிராஜா நடிக்கும் 'மார்கழி திங்கள்' படபிடிப்பு...

2023-05-26 13:28:03
news-image

கார்த்தியின் 'ஜப்பான்' படத்தின் பிரத்யேக காணொளி...

2023-05-25 17:28:45