சசிகுமார் நடிப்பில் தயாராகிவரும் 'பகைவனுக்கு அருள்வாய்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை நடிகர் சூர்யா வெளியிட்டிருக்கிறார்.
'திருமணம் என்னும் நிக்காஹ்' என்ற படத்தை இயக்கிய இயக்குனர் அனீஸ் இயக்கத்தில் தயாராகி வரும் புதிய திரைப்படம் 'பகைவனுக்கு அருள்வாய்'.
இந்தப் படத்தில் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை வாணி போஜன் மற்றும் பிந்து மாதவி ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தில் சிறை தண்டனை பெற்ற சில கைதிகளும் நடிக்கிறார்கள். கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு, ஜிப்ரான் இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன் சென்னையில் தொடங்கி, தற்போது தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
ஜனவரியில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடையும் நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி இருக்கிறது.
இதனை நடிகர் சூர்யா தன்னுடைய இணையப் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார். சசிகுமாரின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து இருப்பதால் எதிர்பார்த்ததை விட கூடுதலாக ஆதரவு கிடைத்து வருகிறது.
இதனிடையே சசிகுமார் நடிப்பில் தயாராகி இருக்கும் 'கொம்பு வச்ச சிங்கம்டா', 'ராஜவம்சம்', 'எம்ஜிஆர் மகன்', 'நாநா', 'பரமகுரு' ஆகிய படங்களை போல் இப்படம் முடங்காமல் விரைவில் வெளியாக வேண்டும் என்று அவரது ரசிகர்கள் பிரார்த்திக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM