விக்ரம் நடித்துவரும் அடுத்த படம் ‘கோப்ரா‘! ஏற்கனவே இந்தப் படத்தின் முதல் விளம்பரப் படம் வெளியாகி ரசிகர்களின் பெருவரவேற்பைப் பெற்றிருந்தது. இந்த நிலையில், கோப்ராவின் இரண்டாவது விளம்பரப் படம் இன்று வெளியாகியிருக்கிறது.

டிமான்டி காலனி, இமைக்கா நொடிகள் ஆகிய திகில் மற்றும் துப்பறியும் படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கும் இந்தப் படம், விக்ரமின் 58 ஆவது படமாகும்.

தமிழ் மட்டுமன்றி, தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் கோப்ரா வெளியாகிறது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில், கிரிக்கெட் வீரர் இர்ஃபான் பத்தான், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரம் ஏற்றிருக்கின்றனர்.

ஏற்கனவே இருமுகன் படத்தில் இரண்டு வேடங்களை விக்ரம் ஏற்றிருந்தார். அதற்கிணங்க அந்தப் படத்தின் ஆரம்பப் புகைப்படங்கள் வெளியாகியிருந்தன.

அதுபோலவே, கோப்ராவின் இரண்டாவது படத்திலும் ஒரு பக்கம் எழுத்துக்களும் இலக்கங்களும் சிதறுவது போலவும் அடுத்த பக்கம் கண்ணாடி அணிந்த விக்ரமின் முகமும் இருப்பதுபோல் இந்தப் படம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இதிலும் விக்ரம் இரண்டு வேடங்கள் ஏற்கிறாரா? அல்லது அறிவியல் சார்ந்த வல்லுனராக விக்ரம் வேடமேற்றிருக்கிறாரா? என்று ரசிகர்கள் பேசி வருகின்றனர்.