வடக்கு ரயில் மார்க்கத்தை இடைமறித்து ரயில் கடவைகளில் கடமையாற்றும் வாயிற்காப்போர்கள் ஆர்ப்பாட்டமொன்றை இன்று காலை முதல் முன்னெடுத்துள்ளனர். 

குறித்த ஆர்ப்பாட்டம் காரணமாக வடக்குக்கான ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

அநுராதபுரம் - மதவாச்சி ஆகிய ரயில் பாதைகளிலே இவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடந்த 31 ஆம் திகதி காலை ஆரம்பமான குறித்த வேலை நிறுத்தப்போராட்டம் இன்று 4ஆவது நாளாக தொடர்கிறமை குறிப்பிடத்தக்கது.

தமக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவை வழங்குமாறு கோரிக்கை விடுத்து இவர்கள் ரயில் பாதையை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.