தென்னாபிரிக்க அணியுடனான இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலிருந்து இலங்கை அணியின் சகலதுறை ஆட்டக்காரர் தனஞ்சய டிசில்வா விலகியுள்ளார்.

தென்னாபிரிக்க அணிக்கு எதிராக நேற்று செஞ்சூரியனில் ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில், துடுப்பெடுத்தாடும் வேளையில் தொடை அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட தனஞ்சய டிசில்வா 79 ஓட்டங்களுடன் ஆட்டத்தை இடை நிறுத்திவிட்டு வெளியேறினார்.

இந் நிலையிலேயே அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை இரு வாரங்களுக்கு ஓய்விலிருக்குமாறு அறிவுத்தியுள்ளனர். 

இதனால் அவர் இத் தொடரில் இனி மேல் விளையாடும் வாய்ப்பு கை நழுவிப் போயுள்ளது.