மத்திய ஆபிரிக்க குடியரசில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த தாக்குதல்களில் அடையாளம் தெரியாத போராளிகளால் மூன்று ஐ.நா. அமைதி காக்கும் படையினரை கொன்றதாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அடையாளம் தெரியாத போராளிகள் இரண்டு தாக்குதல்களை நடத்தியதாகவும், மேலும் இரண்டு அமைதி காக்கும் படையினர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐ.நா அமைதி காக்கும் படையினர் மற்றும் சி.ஏ.ஆர். படையினர் மீதான தாக்குதல்கள் மத்திய கெமோ மாகாணத்தின் டெகோவாவிலும், தெற்கு எம்போமோ மாகாணத்தின் பாகோமாவிலும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மத்திய ஆபிரிக்க குடியரசின் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஜனாதிபதி மற்றும் சட்டமன்றத் தேர்தல்களுக்கான ஆயத்தன பணிகள் முன்னெடுக்கப்பட்டு வந்த நிலையிலேயே இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.