20 ஆயிரம் கிலோ மஞ்சளுடன் நால்வர் கைது

Published By: Vishnu

27 Dec, 2020 | 12:00 PM
image

(செ.தேன்மொழி)

ஹூங்கம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் இன்று அதிகாலை பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக இந்நாட்டுக்கு எடுத்துவரப்பட்ட உலர்ந்த மஞ்சள் தொகையுடன் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன்போது மீன்பிடி படகொன்றை அவதானித்த விசேட அதிரடிப்படையினர் அதனை சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதனைத் தொடர்ந்து குறித்த படகில் எடுத்து வரப்பட்ட 20 ஆயிரம் கிலோ கிராம்  உலர்ந்ந மஞ்சள் தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளன. 

இந்த மஞ்சள் தொகையை ஏற்றிச் செல்வதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு லொறிகளும் இதன்போது கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த விவகாரம் தொடர்பில் கலமெட்டிய , குடாவெல்ல,கோட்டகொட மற்றும் பேருவளை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர்கள் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவர்கள் இந்தியாவிலிருந்தே இந்த மஞ்சள் தொகையை கொண்டுவந்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

இந்நிலையில் இந்த  கடத்தல் செயற்பாடுக்கு மேலும் சிலர் உதவி ஒத்தாசைகளை வழங்கியிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர். 

அதனால் இது தொடர்பில்  பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் ஹூங்கம பொலிஸாருடன் இணைந்து விசேட விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

மக்களே அவதானமாக இருங்கள் ; சமூக...

2024-03-29 12:09:37
news-image

இரு மாணவர்கள் மின்சாரம் தாக்கி வைத்தியசாலையில்...

2024-03-29 12:02:26
news-image

தேர்தல் திருத்தச் சட்டம் : ஹக்கீம்...

2024-03-29 11:25:08
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை...

2024-03-29 11:11:34
news-image

பிளவை நோக்கி பொதுஜனபெரமுன- டெய்லிமிரர்

2024-03-29 09:59:01
news-image

எந்த தேர்தலில் முதலில் நடைபெறவேண்டும் என்பதை...

2024-03-29 09:42:41
news-image

இன்று பெரிய வெள்ளி

2024-03-29 09:47:02
news-image

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் கசிப்பு உற்பத்தி நிலையம்...

2024-03-29 09:20:02
news-image

பொது சுகாதார பரிசோதகர் மீது துப்பாக்கிச்...

2024-03-29 09:27:51
news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30