மஸ்கெலியா பகுதியிலுள்ள தோட்டங்களில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக மஸ்கெலியா பிரதேச வைத்திய சுகாதார பிரிவுக்குட்ட பொது சுகாதார உத்தியோகஸ்த்தர்கள் மற்றும் தோட்ட வைத்தியர்கள்,  மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர்கள், இணைந்து தோட்டங்கள் பொது இடங்கள் பஸ் சாரதிகள் பயணிகள் உட்பட அனைத்து நபர்களை தெளிவு படுத்தும் நடவடிக்கை ஒன்றினை ஆரம்பித்துள்ளனர்.



குறித்த செயத்திட்டத்திற்கமைய தொழிலாளர்கள், பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என அனைத்து பிரிவினருக்கும் கையேடுகள் வழங்கி இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான விளக்கங்களை அளித்து வருகின்றனர்.




இதன் போது சுகாதார வழிமுறைகளுக்கமைய ஒரு மீற்றர் இடைவெளி பேணுதல், கை கழுவுதல், தொற்று நீக்கம் பயன்படுத்துதல் முகக்கவசம் கட்டாயம் அணிதல் போன்ற நடைமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதனை வலியுறுத்தியுள்ளனர்.

அது மாத்திரமின்றி ஒலி பெருக்கிகள் ஊடாக கொரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கான வழிமுறைகளும் அறிவுறுத்தப்பட்டன.

இந்நிகழ்வில் பொது சுகாதார அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், அரசார்பற்ற நிறுவனங்களின் தலைவர்கள், பொது அமைப்புக்கள் தோட்ட வைத்தியர்கள் உட்பட பலரும் இணைந்து கொண்டிருந்தனர்.