(இராஜதுரை ஹஷான்)
வர்த்தகத்துறை அமைச்சின் கீழ் உள்ள லங்கா சதொச மற்றும் சதோச நிறுவனங்களின் தலைவராக செயற்பட்ட நுஷாட் பெரேரா,  சதோச  நிறுவன தலைவர் பதவியில் இருந்து விலகியுள்ளார்.

வேலைப்பளுவின் காரணமாகவே இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக எழுத்து மூலமாக தெரிவித்துள்ளார். இவர், லங்கா சதொச சுபிரி சந்தைப்படுத்தல் வலையமைப்பின் கீழ் இயங்கிய நிறுவனங்கள் மற்றும் சதோச லொறி மற்றும் களஞ்சியப்படுத்தல் பிரிவின் தலைவராக பதவி வகித்துள்ளார்.

இதற்கமைய சதோச நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து கடந்த நவம்பர் மாதம் விலகியுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஆனால் நேற்று சதோச நிறுவன தலைவர் பதவியில் இருந்து நுஷாட் பெரேராவை வர்த்தகத்துறை அமைச்சர் நீக்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளன. இதற்கமைய சதொச தலைவர் பதவிக்கு வர்த்தகத்துறை அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.