சாட்சியங்களே இல்லாத தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறையிலடைத்துள்ள இந்த அரசு கொலையாளி பிள்ளையானை விடுதலை செய்துள்ளதாக பாராளுமன்ற  உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்தார். 

மாமனிதர் ஜோசப் பரராஜசிங்கத்தின் 15ம் ஆண்டு நினைவு தினம் வெள்ளிக்கிழமை மாலை தமிழ்த் தேசி மக்கள் முன்னணி யாழ் அலுவலகத்தில் இடம்பெற்றபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், பிள்ளையான் கொலையாளி சந்தேகநபருக்கு எதிராக சான்று இல்லை என இந்த அரசின் காலத்தில் அவருக்கு விடுதலை வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எந்தவொரு சாட்சியமும் இல்லாமல் பல ஆண்டுகளாக சிறையில் இருக்கும் அரசியல் கைதிகளுக்கு விடுதலை இல்லை.

இதனால் தான் உள்நாட்டு விசாரணையில் நம்பிக்கை இல்லை என்பதை நாம் ஐ.நா வரை சென்று கூறுகிறோம் என்றார்.