பிரித்தானியாவில் திரிபுநிலைக்குள்ளான புதிய வகை கொரோனா வைரஸ் பாதிப்பு பிரான்ஸில் முதல் முறையாக ஒருவருக்கு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

லண்டனில் இருந்து கடந்த 19ஆம் தினதி பிரான்ஸ் திரும்பிய நபருக்கு தொற்று உறுதியானது.

மாதிரிகளை ஆய்வுக்கு உட்படுத்தியதில், அது பிரித்தானியாவில் மரபியல் மாற்றம் அடைந்த கொரோனா வைரஸ் பாதிப்பு என உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக பிரான்ஸ் சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட மேலும் பலருக்கும் உருமாற்ற கொரோனா பாதிப்பு உறுதியாகக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.