Published by T. Saranya on 2020-12-26 13:58:05
நாட்டில் தற்போது மேல் மாகாணத்திலிருந்து வெளியேறுபவர்களுக்கு 11 இடங்களில் எழுமாறாக அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.
அதற்கமைய 18 ஆம் திகதி முதல் இதுவரை மேல் மாகாணத்திலிருந்து வெளியேற முற்பட்ட 41 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவ்வாறு இனங்காணப்பட்ட தொற்றாளர்களில் பாடசாலை மாணவன் ஒருவனும் உள்ளடங்குவதோடு , அவனது தந்தை களுத்துறை தொற்று பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.