இலங்கையில் சிங்கள மேலாண்மையை நாடும் ராஜபக்சாக்கள்

Published By: T Yuwaraj

25 Dec, 2020 | 07:42 PM
image

சல்மான் ராபி ஷேய்க்

  ராஜபக்ச வம்சம் மீண்டும் ஆட்சியதிகாரத்துக்கு வந்த பிறகு இலங்கை சகல வகையிலும் மக்களால் தெரிவுசெய்யப்பட்ட ஏதேச்சாதிகார ஆட்சியின் பாதைக்கு உறுதியாகத் திரும்பியிருக்கிறது.

ஆனால் ராஜபக்சாக்கள் தற்போது கோத்தாபய ராஜபக்ச வகிக்கும் ஜனாதிபதி பதவியில் அதிகாரத்தை குவிப்பதில் மாத்திரம் அக்கறைப்படவில்லை.ஆனால், அதையும் விட மேலே சென்று நாட்டை நிலைகுலையச் செய்யக்கூடிய ஆபத்தைக்  கொண்ட புதிய முற்றுமுழுதான பெரும்பான்மை இனக்குழும வாத (  Ethnic majoritarianism) வடிவத்தை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டு செயற்படுகிறார்கள்.

   ஒரு சிங்கள பௌத்த தேசியவாத கோட்பாடொன்றின் ஆதரவுடன் அரசியலில் பங்கேற்பதற்கு இன, மத சிறுபான்மையினத்தவர்களுக்கு குறைந்தபட்ச இடப்பரப்பை விட்டுவைக்கும் வகையிலானதும் பெரும்பான்மையானவர்களை இந்துக்களாகக்கொண்ட தமிழ்ச்சிறுபான்மை இனத்தவர்களுக்கு  மேலாக சிங்கள மேலாதிக்கத்தை மீண்டும் உறுதிசெய்யக்கூடியதுமான  புதிய அதிகார முறைமையொன்றை ராஜபக்சாக்கள் நடைமுறைப்படுத்துகிறார்கள்.

ஜனாதிபதி பதவியில் வலுவானமுறையில் அதிகாரங்களைக் குவிக்கின்ற அரசியலமைப்புக்கான 20 வது திருத்தச்சட்டம் நிறைவேற்றப்பட்டமை அரசியல், இன, மதரீதியான எதேச்சாதிகார மற்றும் மேலாதிக்க வடிவங்கள் புதிய பிரத்தியேகமான ஒழுங்குமுறைமையொன்றில் எவ்வாறு ஊடறுக்கின்றன என்பதை காட்டுகிறது --- இந்த பாரிய மாற்றம் இனத்துவ அடிப்படையிலான  பல தசாப்த கால உள்நாட்டுப்போரின் பாதிப்புக்களில் இருந்து  இன்னமும் மீள்வதற்கு பிரயத்தனப்பட்டுக்கொண்டிருக்கின்ற ஒரு சமுதாயத்துக்கு குறிப்பிடத்தக்க விளைவுகளை கொண்டுவரக்கூடும்.

  1976 ஆம் ஆண்டில் சிங்கள ஆதிக்கத்திலான அரசாங்கத்துக்கு எதிராக ஆயுதச்சண்டைகளை ஆரம்பித்த விடுதலை புலிகள்1983 ஆம் ஆண்டில்வடக்கு, கிழக்கு பிராந்தியங்களுக்கு  சுதந்திர தனியரசு ஒன்றுக்கான முழுஅளவிலான கிளர்ச்சியை தொடங்கினர். அவர்களும் 2009 ஆம் ஆண்டில் தோற்கடிக்கப்பட்டனர்.

தற்போது இலங்கையில் உணரக்கூடிய முறையில் உள்நாட்டு கிளர்ச்சி அச்சுறுத்தல் எதுவும் இல்லை. இத்தகைய சூழ்நிலை நாட்டை மீண்டும் ஒரு தடவை சிங்கள மேலாண்மையை நோக்கி பௌத்த தேசியவாத சக்திகள் தள்ளுவதற்கு அனுமதித்திருக்கிறது.

  கடந்த காலத்துக்கு திரும்பிச்செல்கின்ற இந்தப்போக்கு சிறுபான்மை இனத்தவர்களை நாட்டை பிளவுபடுத்துகின்ற எண்ணங்களை வளர்த்துக்கொண்டுள்ள அன்னியர்களாக காட்டுகின்ற அசல் தேசியவாத கோட்பாட்டில் வேர்விட்டதாகும்.விடுதலை புலிகளின் போராட்டம் தமிழர்களுக்கு எதிராக சிங்களவர்களி்ன் வன்முறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது.இப்போது அரசாங்க அதிகாரிகள் கடந்த காலத்தில் மோதல்களை தூண்டிவிட்ட அதே அடையாளங்கயைும் உரிமைக்கோரிக்ககளையும் மீண்டும் நினைவுபடுத்துகின்றார்கள்.

  " இலங்கை தமிழ் மக்களின் தாயகம் அல்ல" என்று சக்தி வலு அமைச்சரம் அரசாங்கத்தின் இணைப்பேச்சாளருமான உதய கம்மனபில அண்மையில் கூறினார்." இலங்கையில் தமிழ்மக்கள்  குடியேறிய ஒரு இனச்சிறுபானமையினரே தவிர, ஒரு துணை -- தேசியச் சிறுபான்மையினத்தவர்கள்  அல்ல.அவர்களது உண்மையான தாயகம் இந்தியாவின் தமிழ்நாடேயாகும்".

  " பாகிஸ்தானில் பலூச்சிஸ்தானில் தங்கள் தாயகத்தைக் கொண்ட பலூச், சிந்தி, மற்றும் பஸ்தூன் இனத்தவர்களைப் போலன்றி இலங்கையில் தமிழ் மக்கள் ஒன்றில் தொலைதூர கடந்தகாலத்தில் படையெடுத்து வந்தவர்களாக அல்லது பிரிட்டிஷ் ஆட்சியாளர்களினால்  காலனித்துவ காலகட்டத்தில் அவர்களின் நிருவாக செயற்பாடுகளுக்கு உதவ இலங்கைக்கு கொண்டவரப்பட்டவர்களாகவே இருக்கணே்டும் " என்றும் கம்மன்பில தெரிவித்தார்.

" எனவே,தைமிழ் மக்கள் இந்தியா, பாகிஸ்தானில் உள்ள துணை  -- தேசியச் சிறுபான்மை  இனத்தவர்களுக்கு இருப்பதைப் போான்றஉரிமைகளுக்கும் அதிகாரங்களுக்கும் உரித்துடையவர்கள் அல்ல ".

தமிழ்க்கட்சிகள் மத்தியில் உள் ள உட்பிளவுகள் புதிதாக எழுச்சிபெறும் சிங்கள தேசியவாதத்தையும்  திரிபுவாதத்தையும் வலுவானமுறையில் எதிர்ப்பதற்கு அவற்றுக்கு உதவில்லை. தாங்கள் பிரதிநிதித்துவப் படுத்துகின்ற வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கத்துக்காக தமிழ்க் கட்சிகள் விடுத்துவரும் கோரிக்கை போருக்கு பிரதான காரணியாக விளங்கிய பொதுவாக ' தேசிய இனப்பிரச்சினையை' தீர்த்துவைப்பதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கத்துக்கு நெருக்குதலைக்கொடுப்பதில் அந்தக் கட்சிகளின் ஆற்றலை பலவீனப்படுத்தகிறது.வடக்கு, கிழக்கில் 70 சதவீதமான  மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகி்ன்ற தமிழ்க்கட்சிகள் பலவேறு பிரிவுகளாக சிதறுண்டிருப்பதே அதற்கு காரணமாகும்.

சிங்களவர்களின் ஆதிக்கத்திலான அரசாங்கங்கள் கடந்த காலத்தில் அந்தக் கோரிக்கைகளை அலட்சியம் செய்தன.

1987 இம்ஆண்டில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 13வது திருத்தம் மாகாணசபைகளின் உருவாக்கத்துக்கு வழிவகுத்ததுஆனால், அந்த ஏற்பாடு கொழும்பில் ஒரு இந்தியத் திணிப்பாகவே நோக்கப்பட்டது.அதனால், மாகாணசபைகள் சுதந்திரமாக இயங்குவதற்கு ஒருபோது அனுமதிக்கப்படவில்லை.

மாகாணசபைகள் மட்டுப்பாடுகளைக் கொண்டவையாக இருக்கின்றன என்றும் மத்திய அரசாங்கத்துக்கும் மாகாணசபைகளுக்கும் பொதுவான அதிகாரங்களைக்கொண்ட பொதுப்பட்டியல் இருக்கும்வரை, கொழும்பு தலையிட்டு மாகாணங்களின் கொள்கைகளை அதிகாரமுறையில் உத்தரவிடக்கூடிய சூழ்நிலையில் மாகாணசபைகள் அர்த்தமற்றவை என்றும் தமிழ்க்கட்சிகள்   தொடர்ந்து முறையிடடுுகக்கொண்டிருக்கின்றன.

உண்மையில் தற்போது நடைமுறையில் உள்ள ஒழுக்கமைவின் பிரசாரம் மத்திய அரசாங்கத்தினால் நியமிக்கப்படுகின்ற ஆளுநர் மாகாணங்களின் முதலமைச்சர்களை விடவும் கூடுதல் அதிகாரங்களைக் கொண்டவராக விளங்குகிறார்.

ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகள் இலங்கையில் தேசிய இனப்பிரச்சினை என்ற ஒன்று இல்லை என்றே நினைக்கிறார்கள்.அதனால் 13வது திருத்தத்தில் குறித்துரைக்கப்ட்டிருப்பதற்கு அப்பால் மேலும் எந்தவொரு அதிகாரப்பரவலாக்கமும் தேவையில்லை என்பது அவர்களது நிலைப்பாடாக இருக்கிறது.

அதன்பிரககாரம் நாட்டுக்கு பலம்பொருந்திய மனிதர் ஒருவரின் ஆட்சியும் நாட்டை பொருளாதார மற்றும் சுபிட்சப் பாதையில் வழிநடத்துவதற்கு துறைசார் நிபுுணர்கள் குழு ஒன்றும் தேவை என்று அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால், தற்போது நடைமுறையில் ராஜபக்ச அரசாங்கத்தில் இருக்கும் துறைசார் நிபுணர்கள் என்று கூறப்படுபவர்கள் முன்னாள் இராணுவ அதிகாரிகளே.இலங்கை இராணுவம் எப்பாதுமே சிங்களவர்களின் மேலாதிக்கத்தில் உள்ள ஒரு நிறுவனமாக இருப்பதால் வழமையாக சிவிலியன் நிறுவனங்களாக இருக்கவேண்டியவற்றில் இந்த இராணுவ அதிகாரிகளீன் பிரசன்னம் ராஜபக்சாக்களின் " சிங்களம் மட்டும் "திட்டத்தின் உறுதியான பிரதிபலிப்பாக உள்ளது.

ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரலான கமால் குணரத்னவை பாதுகாப்பு செயலாளராகவும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணைக்கழுவின் தலைவராகவும் கோதாபய நியமித்தமை  ராஜபக்சாக்களின் திடடத்தின் ஒரு அடையாளமாகும்.

குணரத்ன கோதாபயவின் நெருங்கிய ஒரு தோழர்.2019 ஜனாதிபதி தேர்தலில் கோதாபயவின் வெற்றிக்கு வழிவகுத்த பிரசாரப்பணிகளில் முக்கிய பங்காற்றியவர்.முற்றிலும் சிங்களவர் ஆதிக்கத்திலான ஒரு நிறுவனமாக விளங்குகின்ற அதேவேளை,  இராணுவம் கொழும்பில் இருந்து மாகாணங்களுக்கு அதிகாரப்பரவலாக்கம் செய்யப்படுவதை முழுமையாக எதிர்க்கிறது என்பதும் நன்கு தெரிந்ததே.

இலங்கை இராணுவத்தின் 53வது படைப்பிரிவக்கு தலைமைதாங்கிய குணரத்ன விடுதலை புவிகளுக்கு எதிரான கொடூரமான இறுதிக்கட்டத்தில் முக்கிய பங்காற்றியவர்.அரசியலிலும் நிருவாகத்திலும் இராணுவத்தின் பாத்திரம் அதிகரிப்பதன் பிரதிநிதியாக அவர் விளங்குகிறார்.

இது எந்தவொரு பன்முகப்படுத்தலுக்கும் நல்லதல்ல. மத்தியில் இருந்து பிராந்தியங்களுக்கு அதிகாரங்களைப் பரவலாக்கம் செய்வதற்கு மேற்கொள்ளப்பட்ட முன்னைய முயற்சிகள் எல்லாம் போரின் நெருக்குதலின் விளைவாக பெருமளவுக்கு அனுமதிக்கப்பட்டவையாகும்.

இப்போது நிலவுகி்ற ஒப்பீட்ளவிலான அமைதியும் சமாதானத்துக்கு மத்தியில், சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் அதிகாரப்பரவலாக்கல் என்பது அழிந்துபோன விடுதலை புலிகளின் இலட்சியத்தின் பிரகாரம் இலங்கையை பிராந்தியரீதியாக துண்டாடி தனித்தமிழ் ஈழ அரசொன்றை  நிறுவவதை அந்தரங்க நிகழ்ச்சிநிரலாகக் கொண்டது என்றே இன்னமம் நம்பகின்றன.

விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்ட அதேவேளை, பிரிவினைவாத இலட்சியங்கள் தமிழ் அரசியல் கட்சிகள் மத்தியில் உயிர்த்துடிப்புடன் இருப்பதாக இந்த சிங்கள பௌத்த தேசியவாத சக்திகள் நம்புகின்றன.நீண்டகால தமிழ் தேசியப் பிரச்சினைக்கு சமஷ்டி அரசியலமைப்பு மூலமான தீர்வொன்றையே தமிழ் தேசிய கடடமைப்பு கோரிநி்ற்கி்ற போதிலும் கூட சிங்களாபௌத்த தேசியவாதக் கோட்பாடு ஒற்றையாட்சியையே வலியுறுத்தி நிற்கிறது.

அத்தகைய ஒரு நிலைப்பாடு பலம்பொருந்திய தனிமனித ஆட்சிக்கு ஊக்கமளிக்கிறது. புதிய அரசிலமைப்பை வரையும் செயன்முறைகளில் கோதாபய வெற்றிபெறவாரேயானால் சிங்கள பௌத்த தேசியவாதக் கோட்பாடு அரசியலைமைப்பு வடிவம் பெறுவதை எம்மால் காணமுடியும்.

நவம்பரில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட அரசியலமைப்புக்கான 20வது திருத்தம் ஜனாதிபதி பதவிக்கு பெரும்பாலான அரசியலமைப்புரீதியான அதிகாரங்களை வழங்குகிறது.கடந்த அரசாங்க காலத்தில் 2018 அக்டோபரில் மூண்ட அரசியலமைப்பு நெருக்கடி காரணமாக பல சிங்களவர்கள் ஜனாதிபதியிடம் அதிகாரங்கள் குவிக்கப்படுவதை விரும்புகிறார்கள்.அந் அரசியலமைப்பு நெருக்கடி செயற்திறனுடன் ஆட்சி செய்வதிலும் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதிலும் பல கட்சிக் கூட்டரசாங்கத்தக்கு இருக்கக்கூடிய இயலாமையை வெளிச்சம்போட்டுக் காட்டியது.

  அந்த அனுபவம் பலகட்சி குழப்பநிலைக்கு ஒரேயொரு மாற்றுமருந்து " தனிமனித ஆட்சியே" என்று பலரையும் நம்பவைத்தது.

அரசியல் ஒரு பங்கை ஆற்றியிருந்த அதேவேளை, பலம்பொருந்திய ஜனாதிபதி ஆட்சிமுறையொன்றுக்கான மக்க் ஆதரவு கடந்த கால சிங்கள பொளத்தவாத நோக்கு பற்றிய கற்பனாவாத பேரார்வத்தில் இருந்து எழுவதாகும்.

  சில சிங்கள தேசியவாதிகள் ஜனாதிபதி பதவியை புராதன முடியாட்சியின் நவீன தோற்றப்பாடாக பார்க்கிறார்கள். புகழ்மிக்க கடந்த காலத்துக்கு திரும்புவது என்பது நாட்டின் ஐக்கியத்தையும் சிங்கள பௌத்தர்களின் மேலாதிக்கத்தையும் உத்தரவாதப்படுத்தும் என்று நம்புகிறார்கள்.அதுவும்ராஜபக்சாக்களை அரசியல் சமுதாயத்தின் உச்சத்தில் கொண்ட ஆட்சிமுறையொன்றே அந்த உத்தரவாதத்தை முழுமையாக சாத்தியப்படுத்தும் என்றும் அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்.

( ஏசியா ரைம்ஸ்)

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்