வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 60 வயதான பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

குறித்த பெண் கடந்த இருதினங்களிற்கு முன்பாக வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை ஒன்றிற்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவருக்கு பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டு அனுராதபுரம் வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. 

பரிசோதனை முடிவுகளின் பிரகாரம் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது.

அவர் வவுனியா வைத்தியசாலையின் சாதாரண விடுதி ஒன்றில் சிகிச்சை பெற்றிருந்ததுடன், அதி தீவிர சிகிச்சைப்பிரிவிலும் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

தற்போது குறித்த விடுதியில் சிகிச்சை பெற்றுவந்த ஏனைய நோயாளர்கள் மற்றும் ஊழியர்களின் விபரங்கள் வைத்தியசாலை நிர்வாகத்தினால் சேகரிக்கப்பட்டு வருகின்றது.