பொலித்தீன் பொருட்களுக்கு தடை குறித்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட எதிர்பார்த்துள்ளோம் - மஹிந்த அமரவீர

By T. Saranya

25 Dec, 2020 | 03:50 PM
image

(இராஜதுரை ஹஷான்)

பொலித்தீனாலான 6 உற்பத்தி பொருட்களை  தடை  செய்வதற்கான வர்த்தமானியை ஜனவரியில் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது. சுற்றுச்சூழல்  தொடர்பான பாதுகாப்பு சட்டங்கள்  அடுத்த ஆண்டு முதல் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும் என சுற்றாடற்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

சுற்றாடற்துறை அமைச்சில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் ,

ஒரு தடவை மாத்திரம் பாவிக்கும் பொலித்தீன் மற்றும் பொலித்தீனாலான உற்பத்திகளை  மீண்டும் பாவிப்பதை தடை செய்வதற்கான வர்த்தமானி  பத்திரம்  சட்டமாதிபர் திணைக்கள ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதற்கமைய உணவு பொதி உறை (லன்சீட்) மற்றும் பொலித்தீனாலான 6 உற்பத்தி பொருட்களின் பாவனையை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தலை ஜனவரி மாதம் வெளியிட எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தடை செய்யப்படும் பொலித்தீன் உற்பத்திகளில் ஈடுப்படுபவர்களின் தொழிற்துறையை பலப்படுத்த மாற்று நடவடிக்கை எடுக்கப்படும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான சட்டங்கள் ஜனவரி மாதம் தொடக்கம் கடுமையான முறையில் செயற்படுத்தப்படும். சுற்றாடல் துறை பாதுகாப்புக்கு கால தேவைக்கு அமைய சட்டங்களை உருவாக்க எதிர்பார்க்கப்பட்டுள்ளது என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right