போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி கனடா செல்ல முயன்ற யுவதி கைது

Published By: Vishnu

25 Dec, 2020 | 01:37 PM
image

போலியான கனேடிய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாய் வழியாக கனடாவுக்கு தப்பிச் செல்ல முயன்ற குற்றச்சாட்டுக்காக யுவதியொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

குறித்த யுவதியை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் இன்று காலை கைதுசெய்துள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர் 22 வயதுடைய யாழ்ப்பாணம் பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இன்று காலை துபாய் நோக்கி புறப்பட்ட எமிரேட்ஸ் விமான நிறுவனத்துக்கு சொந்தமான ஈ.கே.-649 என்ற விமானத்தில் பயணிப்பதற்காகவே அவர் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.

டிக்கெட் கவுண்டருக்கு (கருமபீடம்) அவர் வந்தபோது அவரது கனேடிய கடவுச்சீட்டை சந்தேகித்த விமான அதிகாரிகள் மேலதிக விசாரணைக்காக ஆவணங்களை விமான நிலையத்தில் உள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

அதன் பின்னர் கனேடிய கடவுச்சீட்டு உள்ளிட்ட பிற ஆவணங்கள் தொழில்நுட்ப பரிசோதனைக்கு அதிகாரிகள் உட்படுத்தியதுடன், இது குறித்து யுவதியிடம் கேள்விகளையும் எழுப்பியுள்ளனர்.

தொழில்நுட்ப ஆய்வுகளின் போது, யுவதி வழங்கிய கனேடிய கடவுச்சீட்டு வேறு ஒருவருக்கு சொந்தமானது என்பதும், கடவுச்சீட்டில் காணப்படும் யுவதியின் புகைப்படம் போலியானது என்பதும் தெரியவந்தது.

அதன் பின்னரே யுவதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகளினால் கைதுசெய்யப்பட்டு, மேலதிக விசாரணை நடவடிக்கைகளுக்காக சி.ஐ.டி.க்கு ஒப்படைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53
news-image

அமைப்பு முறை மாற்றம் ஏற்பட்டால் மாத்திரமே...

2024-03-29 12:22:11
news-image

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவைகள் தாமதம்

2024-03-29 12:04:59
news-image

இலங்கையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு!

2024-03-29 12:58:38