'ஒப்பந்தம் முடிந்தது' - கொண்டாட்டத்தில் போரிஸ் ஜோன்சன்

Published By: Vishnu

25 Dec, 2020 | 09:15 AM
image

ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் பிரெக்ஸிட்-க்கு பிந்தைய வர்த்தக ஒப்பந்தத்தில் உடன்பட்டுள்ளன.

இதன்மூலம் இவ்வாண்டு இறுதியில் இரு தரப்பினரிடையேயான குழப்பமான மற்றும் கடுமையான நிலைமைகள் தவிர்க்கப்பட்டுள்ளன.

அதன்படி 668 பில்லியன் டொலர் மதிப்புள்ள பொருட்கள் மீதான ஒப்பந்தம் பூஜ்ஜிய சுங்கவரி மற்றும் பூஜ்ஜிய ஒதுக்கீட்டைக் குறிக்கும் என்று இங்கிலாந்து வட்டாரம் தெரிவித்துள்ளது. மேலும் பிரிட்டன் எங்கள் பணம், எல்லைகள், சட்டங்கள், வர்த்தகம் மற்றும் எங்கள் மீன்பிடி நீர் ஆகியவற்றின் கட்டுப்பாட்டை திரும்பப் பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளது.

வியாழக்கிழமை அறிவிக்கப்பட்ட இந்த ஒப்பந்தம், டிசம்பர் 31 அன்று ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒற்றை சந்தை மற்றும் சுங்க ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்னதாக வெளிவந்துள்ளது.

இது குறித்து பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜோன்சன் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆரவாரத்துடன் "ஒப்பந்தம் முடிந்தது," என தனது புகைப்படத்துடன் பதவிட்டுள்ளார்.

அத்துடன் நாங்கள் உங்கள் நண்பராகவும், உங்கள் ஆதரவாளராகவும் இருப்போம், உண்மையில் அதனை நாங்கள் ஒருபோதும் மறக்க மாட்டோம் என்று ஐரோப்பிய ஒன்றியத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

இந்த ஒப்பந்தம் பிரிட்டன் மற்றும் 27 நாடுகளின் முகாம் சுங்கவரி அல்லது ஒதுக்கீடு இல்லாமல் பொருட்களை வர்த்தகம் செய்வதை உறுதி செய்யும், நூற்றுக்கணக்கான பில்லியன் பவுண்டுகள் மதிப்புள்ள வர்த்தகம் - மற்றும் யூரோக்கள் - இந்த ஜோடிக்கு இடையே ஒரு வருடம் இருக்கும்.

மேலும் சில பெரிய மாற்றங்கள் ஜனவரி முதலாம் திகதி வெளிவரும். விதிகள் மற்றும் அதிகரித்த அதிகாரத்துவம் நடைமுறைக்கு வரும். நாட்டிற்கும் கண்டத்திற்கும் இடையில் பிரிட்டன் மற்றும் ஐரோப்பியர்கள் எவ்வாறு பயணம் செய்கிறார்கள், வாழ்கிறார்கள், வேலை செய்கிறார்கள் என்பதும் மாற்றமடையும்.

ஐரோப்பிய ஆணையத்தின் தலைமையகமான பிரஸ்ஸல்ஸில் உள்ள பெர்லேமாண்டில் இறுதி விவரங்களை வெளியிட்டுள்ளதால், ஐரோப்பிய ஒன்றியமும் பிரிட்டிஷ் பேச்சுவார்த்தையாளர்களும் புதன்கிழமை இரவு முழுவதும் ஒப்பந்தத்துக்காக பணிபுரிந்தனர்.

இதற்கிடையில், ஜோன்சன் மற்றும் ஐரோப்பிய ஆணையத் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் தொலைபேசியில் பல முறை உரையாடியும் உள்ளனர்.

2016 பிரெக்ஸிட் வாக்கெடுப்புக்கு நான்கரை ஆண்டுகளுக்குப் பிறகு, கிறிஸ்துமஸ் தினத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் புதிய ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தென்னாபிரிக்காவில் தவக்கால யாத்திரீகர்கள் சென்ற பஸ்...

2024-03-29 09:15:05
news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50