(இராஜதுரை ஹஷான்)
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் பூகோள மட்டத்தில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியில் இருந்து எம்மால் மாத்திரம் உடனடியாக மீள முடியாது. மக்களின் வாழ்க்கை செலவுகள் தற்போது அதிகரித்துள்ளமைக்கு பல காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன.
அத்தியாவசிய உணவு பொருட்களின் விலை 2021 ஆம் ஆண்டுக்கு பின்னரே கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்படும்.என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
இலங்கை மன்ற கல்லூரியில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
கொவிட்-19 வைரஸ் தாக்கம் முழு உலகிற்கும் சுகாதார மற்றும் பொருளாதார மட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. பல செல்வந்த நாடுகள் எம்மை காட்டிலும் பாதிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச மட்டத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கத்தில் இருந்து இலங்கை மாத்திரம் விடுப்பட முடியாது.
2 ஆம் உலக மகா யுத்தத்தினால் இலங்கைக்கு நேரடி தாக்கம் ஏற்படவில்லை ஆனால் பொருளாதார மட்டத்தில் தாக்கம் ஏற்பட்டன.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தாலும் இந்நிலைமை தற்போது ஏற்பட்டுள்ளது. ஆகவே சர்வதேச பொருளாதார நெருக்கடியில் இருந்து எம்மால் மாத்திரம் விடுப்பட முடியாது.
வாழ்க்கை செலவுகள் அதிகம் என எதிர்தரப்பினர் குற்றஞ்சாட்டுகிறார்கள். இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் விலை மாத்திரமே அதிகரிக்கப்பட்டுள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கு பின்னரே அத்தியாவசிய பொருட்களின் விலையினை குறைக்க முடியும். தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் அத்தியாவசிய உணவு பொருட்களின் விலையை கட்டுப்படுத்த முடியாது.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்த எடுக்கும் தீர்மானங்கள் இனம்,மதம் மற்றும் மொழி ஆகிய காரணிகளை கொண்டு எடுக்கவில்லை.
கொவிட்-19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை தகனம் செய்யும் தீர்மானத்தை சுகாதார குழுவினரே எடுத்தனர். இவ்விடயத்தில் அரசாங்கத்துக்கு எவ்வித தொடர்பும் கிடையாது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM