புற்­று­நோ­யாளர்­களின் சிகிச்­சை­களின் பொருட்டு, இல­வச மருந்­து­களை கொள்­வ­னவு செய்­வ­தற்­காக 1200 கோடி ரூபா நிதியை ஒதுக்­கு­மாறு கோரி அமைச்­ச­ரவை பத்­திரம் ஒன்று தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளது. இதற்­கான பிர­தான நட­வ­டிக்­கைகள் சுகா­தார அமைச்சர் ராஜித சேனாரத்­ன­வினால் மேற்­கொள்­ளப்­பட்டு வரு­கின்­றது.

இது தொடர்­பாக மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,

அண்­மைக்­கா­ல­மாக இலங்கை பல்­வேறு தொற்­று­நோய்கள் மற்றும் தொற்­றா நோய்­களை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்­டு­வந்­துள்­ளது. இதனால் அநே­க­மான நாடு­களின் பார்வை இலங்கை மீது திரும்­பி­யி­ருந்­த­மையும் சுட்­டிக்­காட்­டத்­தக்­கது.

அந்த வகையில் தற்­போது இலங்கை மக்­க­ளுக்கு புற்­றுநோய் குறித்த சிகிச்­சை­க­ளுக்கு மருந்­து­களை இல­வ­ச­மாக பெற்­றுக்­கொ­டுக்கும் நோக்­குடன் அமைச்­ச­ரவை பத்­திரம் தாக்கல் செய்­யப்­ப­ட­வுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

புற்­றுநோய் சிகிச்­சை­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­படும் சில மருந்­து­க­ளுக்­கான செலவு பல இலட்ச ரூபா­வாக காணப்­ப­டு­கி­றது. இந்­நி­லையில் பொரு­ளா­தார வச­தி­யற்­ற­வர்­களால் இம்­ம­ருந்­து­களை கொள்­வ­னவு செய்ய முடி­யாத நிலை ஏற்­பட்­டுள்­ளது. இந்­நி­லை­யினை கருத்­திற்­கொண்டு புற்­று­நோ­யா­ளர்க­ளுக்குத் தேவையான அனைத்து சிகிச்சைகளையும் இலவசமாக வழங்கும் வகையில் தேவையான மருந்துப் பொருட்களை கொள்வனவு செய்ய இந்த மேலதிக நிதி ஒதுக்கீடு கோரப்பட்டுள்ளது.