நமது பிரார்த்தனைகளை அதிகப்படுத்திக் கொள்வோம் - இம்ரான் மஹ்ரூப்

Published By: Digital Desk 3

24 Dec, 2020 | 05:41 PM
image

ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிப்பு, கொரோனா அச்சுறுத்தல், மழை வெள்ள அனர்த்தம் போன்றனவற்றுக்கு முகங்கொடுக்கும் இந்த இக்கட்டான கால கட்டத்தில் நமது பிரார்த்தனைகளை அதிகப்படுத்திக் கொள்வோம் என திருகோணமலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் இன்று (24.12.2020) விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

அந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

இலங்கை வாழ் முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரை இது சோதனைகள் மிகுந்த காலகட்டம். நமது நியாயமான கோரிக்கைகள் மறுக்கப்படும் காலகட்டம். உரிமைகள் நசுக்கப் படும் காலகட்டம். இவற்றுக்கு மேலாக கொரோனா, வெள்ளம் போன்ற அச்சுறுத்தல்கள். எனவே, இந்த சோதனைகளில் இருந்து விடுபட நாம் இறைநெருக்கத்தை அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.

நாம் விட்ட சில தவறுகள் இந்தச் சோதனைகளுக்கு காரணமாக இருக்கலாம். எனவே, அவற்றுக்காக அடிக்கடி பாவமன்னிப்பு தேடிக்கொள்வோம். நமது கோரிக்கைகளை பிரார்த்தனைகள் ஊடாக இறைவனிடம் எத்தி வைப்போம். 

அதேபோல நமது ஜனாஸாக்கள் பலவந்தமாக சாம்பலாக்கப்படுவதன் மூலம் நாம் இப்போது அநியாயத்துக்கு இலக்காகி வருகின்றோம். அநியாயம் செய்யப்பட்டோரின் பிரார்த்தனைகள் தடையின்றி ஏற்கப்படும் என அல்லாஹ் குறிப்பிடுகின்றான். ஆகையால் இந்த சந்தர்ப்பங்களைப் பயன் படுத்திக் கொள்வோம்.

முடியுமானவரை தொடர்ந்து பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம். குனூத் நாஸிலாவை நமது ஐவேளைத் தொழுகைகளில் ஓதிக் கொள்வோம். முடியுமானவர்கள் நோன்பு நோற்று பிரார்த்தனைகளில் ஈடுபடுவோம்.

நமது தேவைகள், கோரிக்கைகளை இறைவனிடம் முன் வைக்க நல்லதொரு சந்தர்ப்பம் இது. இந்த சந்தர்ப்பத்தை சிறப்பாக பயன்படுத்திக் கொள்வோம். 

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கணித, விஞ்ஞான துறையில் தமிழ் மாணவர்களின்...

2025-03-16 14:12:36
news-image

பட்டலந்த விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை -...

2025-03-16 14:23:35
news-image

மட்டு. கல்லடி பாலத்திற்கு அருகில் விபத்து...

2025-03-16 14:06:07
news-image

திருகோணமலை தமிழ்ச் சங்கத்தின் புதிய தலைவராக...

2025-03-16 11:51:37
news-image

இலங்கைக்கு வருகை தரவுள்ள இந்திய பிரதமர்...

2025-03-16 11:32:28
news-image

103 வயது வரை தெளிவான சிந்தனையுடன்...

2025-03-16 11:52:39
news-image

நடுவானில் இரண்டு விமானப் பணிப்பெண்களை பாலியல்...

2025-03-16 11:19:05
news-image

கிழக்கு மாகாணத்தில் தீவிரவாதக்குழுக்கள் சர்வதேசத்தை திசைதிருப்பும்...

2025-03-16 11:30:22
news-image

கலவரங்களில் பாதிக்கப்பட்டவர்களின் உறவுனர்களுக்கும் நீதி வேண்டும்...

2025-03-16 11:29:10
news-image

வெளிநாட்டுப்பொறிமுறைக்கு அரசாங்கம் அஞ்சுவது ஏன்? ;...

2025-03-16 10:52:12
news-image

முச்சக்கரவண்டியில் போதைப்பொருட்களை கொண்டு சென்றவர் கைது 

2025-03-16 10:10:08
news-image

சமூக ஊடகங்களில் பணம் சம்பாதிப்பதற்கு பாராளுமன்றத்தை...

2025-03-16 10:27:19