கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுக்க நடவடிக்கை எடுப்பேன்: சிவநேசதுரை சந்திரகாந்தன்

Published By: J.G.Stephan

24 Dec, 2020 | 04:57 PM
image

மட்டக்களப்பு மேச்சல்தரை மற்றும் தொல்பொருள் தொடர்பாக 2016, 17ம் ஆண்டு ஆரம்ப திட்டம் நடப்பதற்கு அதற்கான சட்டங்களை இயற்றுவதற்கு காரணமாக இருந்தவர்கள் தமிழ் தேசிய கூட்மைப்பு.  இவர்கள் வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்தால் எடுத்த பணிதான் இப்போது இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்) தெரிவித்தார்.

மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் நேற்று புதன்கிழமை (23) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

தொல்பொருள் என்பது பொதுவானது, இது பாதுகாக்கப்படவேண்டியது, மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் இருந்தால் பாதுகாக்கப்படும்.  ஆனால் மக்களுக்கான பிரச்சனை என்றால் அது தொடர்பாக அரசாங்கத்துடன் பேசி தீர்த்து வைக்கவேண்டிய கடமை எனக்கிருக்கின்றது. 

அதுபொன்று மேச்சல் தரை என்பதும் மட்டக்களப்பு மாவட்டத்தில் எல்லையிலே கால்நடை வளர்ப்பாளர்களுக்கும் பண்ணையாளர்களுக்கும் இடையில்  முறுகல்நிலை ஏற்பட்டிருக்கின்றது. இதை தொடர்ந்தும் நீடித்துக் கொண்டு செல்ல முடியாது. இது தொடர்பாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியிருக்கின்றேன்.

அரசாங்க முக்கியஸ்தர்களுடன் பேசியிருக்கின்றேன். இந்த விடயத்தை விரைவாக முடித்து சுமூகநிலைக்கு கொண்டு வந்து பாரம்பரியமான கால்நடை வளர்ப்பை ஊக்கப்படுத்தி வளர்த்தெடுப்போம் என நான் நம்புகின்றேன். இந்த பணியை முன்னின்று செய்வதற்கு தயாராக இருக்கின்றேன் என்றார். 

மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மட்டக்களப்பு  மேச்சல் தரைக்கு அன்றுதான் வந்துள்ளார். அவர் பிள்ளையான், வியாழேந்திரன் என்ன செய்கின்றார்கள் என பேசுவது மிகவேடிக்கையானது.

எனவே, நான் அவரிடம் கேட்கின்றேன், நீங்கள் 20 வருடமாக பாராளுமன்ற உறுப்பினராக இருக்கின்றீர்கள். வன்னி மாவட்டத்தில் நீங்கள் செய்த பணி என்ன ? எதற்காக மக்கள் உங்களுக்கு வாக்களித்தார்கள் என எனக்கு தெரியவில்லை? அரசியலுக்காக இங்கு வந்து யாரும் பேசவேண்டிய தேவை கிடையாது. எங்களுடைய மக்களை இந்த மண்ணை நம்பி வாழுகின்ற மக்களை காப்பாற்றி முன் கொண்டுவரவேண்டிய பொறுப்பு கடமை எங்களுக்கிருக்கின்றது. ஆகவே நாங்கள் தலைமையேற்றுச் செய்வோம் அரசாங்கத்துடன் பேசுவோம். 

நீங்கள் சொல்லுவதற்காக நாங்கள் அரசாங்கத்துடன் முரண்பட்டு வெளியேறுகின்ற நிலமைவராதென நம்புகின்றேன் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-02-17 06:11:47
news-image

விவசாயிகளைப் போன்று அரச உத்தியோகத்தர்களும் கைவிடப்படுவார்களா?...

2025-02-16 20:51:57
news-image

79 ஆவது வரவு செலவுத் திட்டத்தை...

2025-02-17 04:06:19
news-image

சர்வதேச நாணய நிதியத்தின் 16 அம்ச...

2025-02-17 03:54:13
news-image

யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் மயக்கமடைந்த...

2025-02-17 03:47:47
news-image

யாழில் கல்சியத் தண்ணீரை குடித்த முதியவர்...

2025-02-17 03:44:42
news-image

முள்ளிவாய்க்காலில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்ட முன்னாள்...

2025-02-17 03:39:47
news-image

மின்சாரம் தாக்கி வேலணை செட்டிபுலம் சிறுவன்...

2025-02-17 03:31:52
news-image

உள்ளுராட்சிமன்றத் தேர்தல் எமக்கு சவால் அல்ல...

2025-02-16 20:42:03
news-image

பிரதான பிரச்சினைகளை மறந்து யு.எஸ்.எயிட் சர்ச்சையை...

2025-02-16 16:53:51
news-image

இந்திய மற்றும் இலங்கை வெளியுறவு அமைச்சர்கள்...

2025-02-16 23:04:15
news-image

ஐ.தே.க. - ஐ.ம.ச. கூட்டணி பேச்சுவார்த்தைகளிலிருந்து...

2025-02-16 20:41:19