(செ.தேன்மொழி)

இணையத்தின் ஊடாக அழகிகளை விற்ற கும்பலொன்றை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன் போது 9 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிசார் தெரிவித்தனர்.

கல்கிஸ்ஸ பகுதியில் இருமாடி சொகுசு வீடொன்றில் குறித்த சட்டவிரோத செயற்பாடு இடம்பெறுவதாக குற்றத்தடுப்பு பிரிவிற்கு தகவல் கிடைத்துள்ளது. 

இதனடிப்படையில் கல்கிஸ்ஸ பொலிசார் பல நாட்களாக குறித்த வீடு மற்றும் அங்கு உள்ளவர்கள் குறித்து கண்காணிப்பில் ஈடுப்பட்டுள்ளனர்.

இவ்வாறானதொரு நிலையில் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த வீடு இன்று சோதணைக்குட்படுத்தப்பட்டது. இதன் போதே 9 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.