மனித வலு நிறுவனத்தினூடாக மின்சாரசபையில் சேவையாற்றும் 3700 பணியாளர்களில் 2500 பேருக்கு நிரந்த நியமனம் எதிர்வரும் 17ஆம் திகதி வழங்கப்படவுள்ளது என மின்வலு மற்றும் புதுப்பிக்கதக்க சக்தி அமைச்சர் நேற்று பாராளுமன்றில் தெரிவித்தார்.

இலங்கை மின்சாரசபையின் ஆட்சேர்ப்பு விதிமுறைகளுக்கமைய தகைமைகள் ஆராய்ந்து பார்த்த பின்னர் ஏனையோரும் இணைத்துக்கொள்ளப்படுவர் என்று அவர் மேலும் தெரிவித்தார்.