அக்கரபத்தனை பிரதேச சபை தலைவரை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்த தீர்மானம்

By T Yuwaraj

24 Dec, 2020 | 05:22 PM
image

அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர் கதிர்ச்செல்வனை கட்சியிலிருந்து தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.

தனிமைப்படுத்தல் விதிமுறையைமீறி செயற்பட்டதாலேயே அவருக்கு எதிராக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்று இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், இராஜாங்கச் செயலாளருமான ஜீவன் தொண்டமான் தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ள அக்கரபத்தனை பிரதேச சபை தவிசாளர் தற்போது அம்பாந்தோட்டையிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் சிகிச்சைப்பெற்றுவருகின்றார்.

இந்நிலையில் அவர் குணமடைந்து வந்ததும் அவரிடம் விளக்கம் கோரப்பட்டு, ஒழுக்காற்று நடவடிக்கை முன்னெடுக்கப்படும் எனவும் காங்கிரஸின் பொதுச்செயலாளர் கூறினார்.

பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்த நிலையில் அதன் முடிவுகள் வெளிவருவதற்கு முன்னரே அக்கரபத்தனை பிரதேச சபை தலைவர், தனிமைப்படுத்தல் சட்ட திட்டங்களை மீறும் வகையில் அரசாங்க நிகழ்வுகளில் கலந்துகொண்டிருந்தார்.

இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். அவர்கள் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஐஸ் போதைப்பொருள் பயன்பாடு மன நோயை...

2022-11-28 16:02:34
news-image

வங்கி ATM அட்டைகள் மூலம் பண...

2022-11-28 15:55:24
news-image

மத்திய வங்கி ஆளுநர் மீது ஜனாதிபதியின்...

2022-11-28 15:41:55
news-image

மக்கள் போராட்டம் ஓயவில்லை என்பதை ராஜபக்ஷக்கள்...

2022-11-28 15:02:21
news-image

இலங்கைக்கு நாங்கள் உதவி வழங்கிய பின்னர்...

2022-11-28 14:52:06
news-image

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பில்...

2022-11-28 14:58:30
news-image

100 புகைப்படங்களில் ஒன்றாக தெரிவாகியுள்ள கோட்டாபயவின்...

2022-11-28 14:25:27
news-image

அரசியல் தீர்வினை ஒரே நாளில் காணலாம்...

2022-11-28 15:11:16
news-image

மொரட்டுவையில் விபசார விடுதி சுற்றிவளைப்பு :...

2022-11-28 14:27:15
news-image

13 பிளஸ்ஸுக்கு செல்லும்போது ஒற்றையாட்சி ஐக்கிய...

2022-11-28 15:06:45
news-image

இலங்கையை தமது பொறிக்குள் சிக்க வைக்க...

2022-11-28 14:15:42
news-image

இலங்கையில் புதுப்பிக்கத்தக்க வலுசக்தி திட்டங்களில் முதலீடு...

2022-11-28 13:58:20