2021 ஜனவரி மாதம் ஆரம்பமாகவுள்ள நான்காவது அபுதாபி டி - 10 லீக்கில் விளையாடுவதற்காக இலங்கை கிரிக்கெட் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அபுதாபி டி - 10 தொடரானது எதிர்வரும் ஜனவரி 21 - பெப்ரவரி 06 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இத் தொடரின் அனைத்து போட்டிகளும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபயில் அமைந்துள்ள சயீத் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.

இத் தொடரில் உலகெங்கிலும் உள்ள வரையறுக்கப்பட்ட ஓவர் கிரிக்கெட்டின் மிகப் பெரிய நட்சத்திரங்களான கிறிஸ் கெய்ல், ரஸ்ஸல், அஃப்ரிடி உள்ளிட்ட பல வீரர்கள் பங்கேற்பது உறுதியாகியுள்ளது.

இந் நிலையில் தற்போது நடைபெற்று வரும் ஏலத்தின் அடிப்படையில் இலங்கை வீரர்கள் பலரும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

அதன்படி:

 • இசுறு உதான - பங்ளா டைகர்ஸ் 
 • திசர பெரேரா - புனே டெவில்ஸ்
 • தசூன் சானக்க - டெல்லி புல்ஸ்
 • பானுக ராஜபக்ஷ - டெக்கான் கிளாடியேட்டர்ஸ்
 • துஷ்மந்த சாமர - டெல்லி புல்ஸ்
 • வனிந்து ஹசரங்க - டெக்கான் கிளாடியேட்டர்ஸ்
 • சாமர கபுகெதர - புனே டெவில்ஸ்
 • லஹிரு குமார - டெக்கான் கிளாடியேட்டர்ஸ்
 • அவிஷ்க பெர்னாண்டோ, டீம் அபுதாபி
 • அஜந்த மெண்டீஸ் - புனே டெவில்ஸ்
 • நுவான் பிரதீப்– நோர்தன் வோரியர்ஸ்
 • மகீஷ் தீக்ஷனா – நோர்தன் வோரியர்ஸ்