திருகோணமலை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதற்கான ஆபத்து கூடுதலாக காணப்படுவதால் தேவையான விடங்களுக்காக மாத்திரம் அப்பகுதிக்கு பயணம் செய்யுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் திருமதி அநுராதா யஹம்பத் பொது மக்களைக் கேட்டுள்ளார்.

எதிர்வரும் விடுமுறைக் காலத்தில் பயணங்களை வரையறுத்துக் கொள்ளுமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா வைரஸ் பரவலைத் தவிர்ப்பதற்குத் தேவையான தீர்மானங்களை மேற்கொள்ளும் மாகாணக் குழு ,ஆளுநர் செயலகத்தில் நேற்று காலை கூடிய போது அவர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறுவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பாதுகாப்பு தரப்பை கேட்டுள்ளார்.

திருகோணமலை மாவட்டத்திற்கு வருவோர் தொடர்பில் விசேட கவனம் செலுத்துமாறுமாறும் தற்போதுள்ள சோதனைச் சாவடிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறும் அவர் பாதுகாப்பு தரப்பினரை பணித்துள்ளார்.