(எம்.எப்.எம்.பஸீர்)
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட களேபரத்தின் போது உயிரிழந்த 11 கைதிகளில் மேலும் 04 பேர் துப்பாக்கிச்சூட்டில் ஏற்பட்ட காயம் மற்றும் கொவிட் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக ஐவரடங்கிய விசேட நிபுணர்கள் குழு, வத்தளை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
வத்தளை நீதவான் புத்திக ஶ்ரீ ராகல முன்னிலையில் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்த, நிபுணர்கள் குழு இந்த விடயம் தொடர்பில் அறிவித்துள்ளது.
மரண பரிசோதனை மேற்கொண்டு இன்றைய தினம் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட 04 கைதிகளின் சடலங்களை புதைப்பதா அல்லது எரிப்பதா என்பது தொடர்பான தீர்மானத்தை எதிர்வரும் 3 ஆம் திகதி வழங்கவும் நீதவான் தீர்மானித்துள்ளார்.
உயிரிழந்த கைதிகளின் உரிமைகளை பாதுகாப்பதற்காக சட்டத்தரணிகள் குழாம் மன்றில் ஆஜராகி விடயங்களை முன்வைத்ததுடன், அதற்கு சட்ட மா அதிபர் சார்பில் மன்றில் ஆஜராகிய அரச சட்டவாதி நிஷாரா ஜயரத்ன அடிப்படை ஆட்சேபனையை முன்வைத்தார்.
எந்த கைதிகளுக்காக இந்த சட்டத்தரணிகள் மன்றில் விடயங்களை முன்வைக்கின்றனர் என்பது தொடர்பில் தெளிவாகக் குறிப்பிடாமையால், அவர்களுக்கு விடயங்களை முன்வைக்க அனுமதி வழங்க வேண்டாம் என அரச சட்டவாதி மன்றில் கோரிக்கை விடுத்தார்.
இது தொடர்பான தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி வழங்கப்படும் என தெரிவித்த நீதவான், எதிர்வரும் 28 ஆம் திகதி அடிப்படை ஆட்சேபனையை எழுத்து மூலம் சமர்ப்பிக்குமாறு அரச சட்டத்தரணிக்கு உத்தரவிட்டார்.
இதேவேளை, மஹர சிறையில் ஏற்பட்ட களேபரத்தின் போது உயிரிழந்த 08 கைதிகளின் மரண பரிசோதனை இதுவரை நிறைவு செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் மூன்று கைதிகளின் மரண விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM