(எம்.மனோசித்ரா)
கொவிட்-19 வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 180 ஐ கடந்துள்ளது. இந்நிலையில் தொற்றினால் நாட்டில் இரு சிசுக்கள் உயிரிழந்துள்ளதோடு , நேற்று முன்தினம் 15 வயதுடைய சிறுவனொருவனின் மரணமும் பதிவாகியுள்ளது.
இதேவேளை திருகோணமலை மாவட்டத்திலும் தொற்றாளர்கள் இனங்காணப்படுவதால் வெளிப்பிரதேசங்களிலிருந்து அங்கு வருவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.
அத்தோடு அடுத்த வாரமளவில் சிவனொளிபாதமலை யாத்திரை பருவ காலம் ஆரம்பமாகவுள்ள நிலையில் நுவரெலியா மாவட்டத்தில் வைரஸ் பரவல் அபாய நிலைமை காணப்படுவதால் ஜனவரி மாதம் யாத்திரை வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாஹரகம போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த தங்கொட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயதான சிறுவன் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவராக இனங்காணப்பட்ட பின்னர் ஐ.டி.எச். வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதுடன் அந்த வைத்தியசாலையில் நேற்று 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இவரது மரணத்திற்கான காரணம் கொவிட் 19 தொற்று நிமோனியா , இரத்தம் நஞ்சானமை மற்றும் கடுமையான லுகேமியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கொழும்பு 07 பிரதேசத்தைச் சேர்ந்த 72 வயதான பெண்ணொருவர் கடந்த 20 ஆம் திகதி வீட்டில் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்கான காரணம் கொவிட் நிமோனியா நோய் நிலை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று இனங்காணப்பட்ட தொற்றாளர்கள்
புதன்கிழமை மாலை 7 மணி வரை 348 பேருக்கு தொற்றுறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் 276 தொற்றாளர்கள் பேலியகொடை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் எஞ்சியோர் சிறைச்சாலை கொத்தணியுடன் தொடர்புடையவர்கள் என்றும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதற்கமைய நாட்டில் தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை 38 407 ஆக உயர்வடைந்துள்ளது. இவர்களில் 29 882 தொற்றாளர்கள் குணமடைந்துள்ளதோடு , 8342 தொற்றாளர்கள் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
திருகோணமலைக்கு வருவதை குறைத்துக் கொள்ளவும்
கடந்த சில நாட்களில் திருகோணமலை மாவட்டத்தில் சுமார் 70 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர். எனவே இம் மாவட்டத்தில் வைரஸ் பரவல் அதிகரிப்பதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதால் பண்டிகை காலங்களில் மாவட்டத்திற்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு திருகோணமலை மாவட்ட அதிபர் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஜனவரியில் சிவனொளிபாதமலை யாத்திரையை தவிர்த்துக் கொள்ளவும்
நாட்டில் தற்போது காணப்படுகின்ற கொவிட் பரவல் நிலைமைக்கு மத்தியில் எதிர்வரும் சில நாட்களில் சிவனொளிபாதமலை புனித யாத்திரைக்கான பருவ காலம் ஆரம்பமாகவுள்ளது.
எனினும் நுவரெலியா மாவட்டத்திலும் கனிசமானளவு தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதால் ஜனவரி மாதம் சிவனொளிபாதமலை யாத்திரைக்கு வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட கொவிட் தடுப்பு குழு பொது மக்களை கேட்டுக் கொண்டுள்ளது.
நுவரெலியா மாவட்டத்தில் ஹட்டன் நகரத்தை அண்மித்த பகுதிகளில் தொற்று பரவல் தீவிரமாகக் காணப்படுவதால் சுகாதார தரப்பினரால் கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதோடு , போக்குவரத்து கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையைக் கருத்திற் கொண்டு சிவனொளிபாதமலை யாத்திரை வருவதை தவிர்த்துக் கொள்ளுமாறு நுவரெலியா மாவட்ட அதிபர் எம்.பி.ஆர்.புஸ்பகுமார தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM