தேவையான மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்படுகிறது - பிரதமர்

Published By: Digital Desk 4

23 Dec, 2020 | 10:10 PM
image

(இராஜதுரை ஹஷான்)

வெளிநாடுகளில் இருந்து மருந்துகள் இறக்குமதி  செய்வதை குறைத்து அல்லது  நிறுத்தி   தேவையான மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது. 

நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ள  வேண்டுமாயின் நாடு அனைத்து துறைகளிலும் தன்னிறைவடைய வேண்டும். அதற்கான திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

இரத்மலானை அரச மருந்து உற்பத்தி கூட்டுத்தாபனத்தில் புதிய ஹோமன மருந்து பாணி மற்றும் மருந்து குளிசை உற்பத்தி நிலையம் இன்று  பிரதமரால் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் பிரதமர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

வெளிநாடுகளில் இருந்து   பெருமளவில் மருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன.  இறக்குமதி செய்யப்படும் மருந்துகளை குறைத்து அல்லது நிறுத்தி அம்மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

தற்போது முன்னெடுக்கப்படும் மருந்துற்பத்தி திட்டத்துக்கு 2012 ஆம் ஆண்டு அனுமதி கிடைக்கப் பெற்றது.இதற்கு அப்போதே 4470 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டது.

பயன்பாட்டில் உள்ள 70 சதவீதமான மருந்துகள் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த மருந்துகளை உள்நாட்டில் உற்பத்தி செய்ய முடியும் அதற்கான  மனித வளம் காணப்படுகிறது.

மருந்து உற்பத்தி வலயத்தை அம்பாந்தோட்டையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.மருந்து உற்பத்தி வயலத்தை உருவாக்குவது சுபீட்சமான எதிர்கால கொள்கையினது  இலக்காகும்.

நாட்டின் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ள வேண்டுமாயின் நாடு அனைத்து துறைகளிலும்  தன்னிறைவடைய வேண்டும். இதற்கான திட்டங்கள் தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளன. என்றார்.

புதிய  நாடு - புதிய மருந்து என்ற தொனிப்பொருளின் கீழ் அரச மருந்தக  கூட்டுத்தாபனத்தில்  புதிதாக உற்பத்தி செய்யப்பட்ட மருத்துவ பாணம் பிரதமரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47