யாழ். மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் பரவிய கொரோனா வீரியம் கூடியது - வைத்தியர் ஆ.கேதீஸ்வரன்

Published By: Digital Desk 4

23 Dec, 2020 | 06:47 PM
image

மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது. இதனாலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ். மருதனார்மடம் சந்தைக்கு சென்றவர்களுக்கான அறிவிப்பு | Virakesari.lk

எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம் என்றும் அவர் கேட்டுள்ளார்.

இதுதொடர்பில் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எதிர்வரும் நாட்களில் கிறிஸ்துமஸ் மற்றும் புதுவருட பண்டிகைகள் கொண்டாடப்பட இருக்கின்றது. இச்சூழ்நிலையில் நாட்டில் கொரோனா தொற்று மிக வேகமாகப்பரவி வருகின்றது.

அதிலும் தற்பொழுது யாழ்ப்பாணம் உடுவில் பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட மருதனார்மடம் சந்தைக் கொத்தணியில் ஏற்பட்டுள்ள வைரஸ் தொற்றானது மிகவும் வீரியம் கூடியதாக காணப்படுகின்றது. இதனாலேயே குறுகிய காலத்தில் மிக அதிகமான நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

கொரோனா தொற்று நோயினால் நாட்டில் பல இறப்புகளும் அடுத்தடுத்து ஏற்பட்டுவருகின்றன.

இந்நிலையில் பண்டிகைகளுக்காக பொதுமக்கள் பெருமளவில் ஒன்றுகூடும் பொழுது இந்நோய் எமது பிரதேசத்திலும் மேலும் தீவிரமாகப் பரவும் வாய்ப்புள்ளது. எனவே இப் பண்டிகைக் காலத்தில் பொதுமக்கள் தேவையற்ற ஒன்றுகூடல்களைத் தவிர்ப்பதுடன் மத வழியாடுகளில் ஈடுபடும் போது கட்டாயமாக முகக் கவசம் அணிவதுடன் சமூக இடைவெளியையும் பேணுதல் வேண்டும்.

அனைவரும் இப்பண்டிகைக் காலத்தில் கொரோனா தடுப்பு பாதுகாப்பு முறைகளை பின்பற்றுவதன் மூலம் உங்களையும் உங்கள் குடும்பத்தினர், உற்றார், உறவினர், நண்பர்கள், அயலவர்கள் அனைவரையும் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

எனவே நாம் அனைவரும் சமூகப் பொறுப்புடன் அமைதியாக வீட்டிலிருந்து எமது பண்டிகைகளைக் கொண்டாடுவோம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31