கொலைக் குற்றத்துடன் தொடர்புடைய நபரொருவருக்கு பாணந்துறை நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

குறித்த உத்தரவினை நீதவான் விக்ரம் களுஹாராச்சி இன்று (02) பிறப்பித்துள்ளார்.

மொரடுவை - கடொலான பகுதியில் கடந்த 2007 ஆம் ஆண்டு மே மாதம் இடம்பெற்ற கொலைக் குற்றம் தொடர்பிலேயே குறித்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

குற்றம் சுமத்தப்பட்டவர் மொரடுவை பகுதியைச் சேர்ந்தவரென தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த கொலையுடன் தொடர்புடைய மற்றுமொரு நபர் விசாரணை நடைபெற்ற காலப்பகுதியில் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.