மஸ்கெலியா சுகாதார அத்தியாட்சகர் பிரிவுக்குட்பட்ட சாமிமலை மல்லியப்பு தோட்டத்தில் இன்று கொரோனா தொற்றுக்குள்ளான பெண் ஒருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக மஸ்கெலியா சுகாதார அத்தியாட்சகர் தெரிவித்தார். 

கொழும்பு வெள்ளவத்தை பகுதியில் தொழில்புரிந்த  27 வயதுடைய யுவதி ஒருவர் கடந்த 19 ஆம் திகதி மஸ்கெலியா சாமிமலை மல்லியப்பு தோட்டத்தில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற நிலையில் கலுகல பொலிஸ் காவலரணில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த பி.சி.ஆர் முடிவுகள் இன்று கிடைக்க பெற்ற நிலையில் அவருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து குறித்த யுவதியை இன்று அம்பாந்தோட்டை சிகிச்சை நிலையத்திற்கு  அழைத்துச் செல்ல உள்ளதாக பொது சுகாதார மேற்பார்வை அதிகாரி தெரிவித்தார்.