சவுதி அரேபியாவில் நபரொருவர்  புலியொன்றை வளர்ப்பு மிருகமாக வீட்டில் வளர்த்து வந்தார். அந்த புலிக்கு தனியாக பெரிய கூண்டொன்றையும் அமைத்து யாருக்கும் ஆபத்து நேர்ந்துவிடாத வகையில் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில் அவரது நண்பரொருவர் அனுமதியுடன் புலியின் கூண்டுக்குள் சென்று புலியுடன் விளையாடும் காட்சியினை புலியின் உரிமையாளரான நண்பர் கையடக்கதொலைபேசியில் வீடியோ செய்து கொண்டிருந்துள்ளார்.

இதனிடையே அந்த நபரின் விளையாட்டில் கோபமடைந்த புலி திடீரென்று அவரை தாக்கியுள்ளது. முதலில் அதை கருத்தில் கொள்ளாத அந்த நபர் புலியிடம் போக்கு காடுவதை போல கூண்டுக்குள் ஓடியுள்ளார். இதனால் புலி கோபமடைந்து

அந்த நபரின் காலை கவ்விக்கொண்டு அது மறைவிடத்திற்கு அவரை இழுத்து சென்றது. 

இதில் அதிர்ச்சி அடைந்த அந்த நபர் உயிருக்கு பயந்து அலறியுள்ளார். ஆனால் இதை பொருட்படுத்தாத அதன் உரிமையாளர் சிரித்துக்கொண்டே வீடியோ எடுத்து கொண்டிருந்தார்.

இதனிடையே புலிக்கு பயிற்சி அளிக்கும் நபர் சுதாரித்துக்கொண்டு தடி ஒன்றால் புலியிடம் இருந்து அந்த நபரை விடுவிக்க முயற்சி எடுத்துள்ளார். பின்னர் ஒருவழியாக புலியிடம் இருந்து அந்த நபர் விடுபட்டு தப்பி கூண்டில் இருந்து வெளியேறியுள்ளார்.