அட்டன் டிக்கோயா நகர சபையின் தலைவர் உட்பட 5 பேர் தனிமைப்படுத்தலில்

Published By: Digital Desk 4

23 Dec, 2020 | 04:56 PM
image

கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரன் உட்பட  ஐந்து பேர் இன்று (23) முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் ஆர்.பாலகிருஸ்ணன் தெரிவித்தார்.

அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர்  சுப்பிரமணியம் கதிர்ச்செல்வன் கடந்த 16 ஆம் திகதி மேற்கொண்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா தொற்று பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவர் அதன் பின் நடைபெற்ற அரசியல் மற்றும் ஏனைய கூட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். அவருடன் கலந்து கொண்டவர்களே இவ்வாறு இன்று தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

இதில் முன்னாள் மத்திய மாகாண சபை பிலிப்குமார், ஹட்டன் டிக்கோயா நகர சபையின் இரண்டு உறுப்பினர் மற்றும் அக்கரபத்தனை பிரதேச சபையின் செயலாளர் ஆகியோர் இன்று (23) ஆம் திகதி முதல் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் மேலும் தெரிவித்தார்.

இதே வேளை குறித்த பிரதேச சபை தலைவர் கண்டியில் நடைபெற்ற கூட்டம் ஒன்றிலும் தலவாக்கலை மற்றும் கொட்டகலை சி.எல்.எப் ஆகிய இடங்களுக்கு சென்று வந்துள்ளதால் அவருடன் நெருங்கி பழகியவர்களை தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறைச்சார்ந்தோர் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 15:50:37
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56