மட்டக்களப்பில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்றில் தாதியொருவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
மட்டக்களப்பு கண்ணகி அம்மன் கோவில் 3ம் குறுக்கு வீதியை அண்டியுள்ள வீட்டில் நேற்று செவ்வாய்க்கிழமை (22.12.2020) இரவு 9.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூட்டில் பூம்புகார், கண்ணகியம்மன் வீதியை சேர்ந்த மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் தலைமைத் தாதிய உத்தியோகத்தராக கடமையாற்றும் நடராஜா ராதா (வயது 55) என்பவரே படுகாயமடைந்துள்ளாரென பொலிஸார் தெரிவித்தனர்.
பறவைகளை சுடும் எயார்கன் துப்பாக்கியைக் கொண்டு வீட்டின் மேல்மாடியில் இருந்து மரத்தில் இருந்த வெளவால் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதில் எதிர்வீட்டில் இருந்து வெளியில் வந்த தாதி மீது குறி தவறி குண்டு பாய்ந்துள்ளது.
இதில் தலைமைத் தாதிய உத்தியோகத்தர் படுகாயமடைந்துள்ளார். இதனையடுத்து படுகாயமடைந்த தாதி மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில், துப்பாக்கி சூடு நடத்திய சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM