பிரான்ஸின் மத்திய பகுதியில் முன்னெடுக்கப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் மூன்று பொலிஸார் உயிரிழந்ததுடன், மேலும் ஒருவர் காயமடைந்தும் உள்ளார்.

பிரான்ஸின்  மத்திய பிராந்தியமான புய்-டி-டோம் நகரில் இன்று புதன்கிழமை அதிகாலை வீட்டு வன்முறை சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதன் பின்னர் பொலிஸார் குறித்த வீட்டுக்கு சென்றபோது 48 வயதான சந்தேக நபர் ஒருவரே பொலிஸார் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

எவ்வாறெனினும் வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாகவும், சந்தேக நபரை தேடும் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதேவேளை பிரான்சின் பி.எஃப்.எம்.டி.வி ஒளிபரப்பாளர் சந்தேக நபர் இன்னும் ஆயுதம் ஏந்தியிருப்பதாக தெரிவித்தார்.

இந்த சம்பவத்தின் பின்னணியில் எந்தவொரு போர்க்குணமிக்க நோக்கமும் இல்லை என பிரான்ஸ் அதிகாரிகள் கூறியுள்ளனர்.